வைஷாலி வாசகர் வட்டம்: 2016

FREE JOBS - JUST CLICK HEAR

Friday 9 December 2016

மார்கழி மாதம்:- வைஷாலி வாசகர்வட்ட 34வது சந்திப்பு, சேவை/தான/தர்ம/உதவும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்.

மார்கழி மாதம்:- வைஷாலி வாசகர்வட்ட 34வது சந்திப்பு, சேவை/தான/தர்ம/உதவும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்.
வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 34வது வாசகர் வட்ட சந்திப்பு 18-12-2016 தேதி, 3-வது ஞயிறு அன்றய  மார்கழி மாதம்:- சேவை/தான/தர்ம/உதவும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்...  
காலை 6.00 மணியிலிருந்து  தொடங்கும் நமது வைஷாலி ஐயப்ப சேவா சங்கத்தின் 17வது ஸ்ரீ ஐயப்ப சாஸ்தா ப்ரீத்தி பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் தாங்களும் தங்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் நபர்களுடன் திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தித் தருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.... 

இடம்:- NCR-New Delhi "வைஷாலி மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில், வைஷாலி செக்டர்-4,  ஸ்ரீ கிருஷ்ணா பவனில் அமைந்துள்ள  "ஸ்ரீ ராதா கிருஷ்ணன் கோவிலில்" 
# சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... 
அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?.... உதவி மற்றும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....



Wednesday 23 November 2016

ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- நவம்பர்-2016-கார்த்திகை-மாதம்

கார்த்திகை மாத சுட்டீஸ் குல்கந்து இதழின் http://gulkanthu.blogspot.in/ சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "கார்த்திகை-மாத-தீபத்திருநாள் கொண்டாட்டம்" படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- நவம்பர்-2016-கார்த்திகை-மாதம் தீபத்திருநாள் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்-வலைப்பதிவு இதழ் போட்டி என்-08.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-12-2016 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.
=======================================
$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-7 அக்டொபர்-2016-ஐப்பசி-மாதம் தண்ணீர் சிக்கனமும் சேமிப்பும் , வலைப்பதிவு இதழ் போட்டி என்-07. ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,
1. தகரக்கதவின் சட்டம், 2.கதவின் அருகே சுவற்றின் மீது மின் விளக்கு, 3. சிறுவன் அருகில் சோப்பு கட்டி, 4. நீர் நிரம்பும் வாலி , 5.சிறுமியின் தலையில் பூ ... என ஆறு வித்தியாசங்கள் உள்ளன.

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 23 நபர்கள்மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், (முதல்முறையாக மிக அதிகமானவர்கள் தவறான பதிலை கூறியிருந்தார்கள்.) தமிழில் விடை எழுதியவர்கள்=18, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=04, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=01, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.

Sunday 20 November 2016

"எங்க ஊரில் உள்ள குளங்களையும், ஏரியையும் காணவில்லை?????" அராஜகம், ஆக்கிரமிப்பு, ஏன் என்று கேட்க முடியாத நிலையில்.????

வைஷாலி வாசகர் வட்ட 33வது சந்திப்பு...20-11-2016 கார்த்திகை மாதம் -புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்......

இருள் சூழ்ந்திருக்கும் இடத்தில் பிரகாசமான ஒளி ஏற்றப்படுமேயானால் அவ்விடத்தில் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் உண்டாகும்.

20-11-2016 இன்று நமது 33-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,  

கார்த்திகை மாத வாசகர் வட்டத்தின் :-33வது சந்திப்பில் (20-11-2016) முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தொடர்ந்து கார்த்திகை மாதம் -புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்.  வாழ்க்கையை ஒளிமயமாக்கும் கார்த்திகை மாத சிறப்புகள் பற்றியும் ஒரு அலசல்.... 
"என் கேள்விக்கு என்ன பதில்?" நிகழ்ச்சியில் ... 
வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்"...
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"..  நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் ???????????  என்கிற  கேள்விக்கு ...வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ்கள் வழங்கிய "என் கேள்விக்கு என்ன பதில்? " நிகழ்ச்சியில்....மனம்திறந்து பேசினார்கள் ... 

"எங்க ஊரில் உள்ள குளங்களையும், ஏரியையும் காணவில்லை?????"  அராஜகம், ஆக்கிரமிப்பு, ஏன் என்று கேட்க முடியாத நிலையில்.. ????
முழு விவரங்களுக்கு வருகைத தாருங்கள் வைஷாலி வாசகர் வட்டாத்தின் "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் 20-11-2016 கார்த்திகை மாத இதழில் http://gulkanthu.blogspot.in/

மேலும்:- . படிக்காத தவறாதீர்கள் ...

$ சபிக்கப்பட்ட மனம் மிகுந்த "பூ" எது?   சிவனுக்குப் பிடிக்காத, பூசைக்கு உதவாத பூவாக மணம்மிகுந்த "தாழம்பூ" சாபம் பெற்றது என்று கார்த்திகை மாதத்தின் சிறப்புகளை பல்வேறு தெரிந்த புராணம் தெரியாத விவரங்கள் என திருவண்ணாமலை அண்ணாமலையாரின் தல புராண கதைகளை சுட்டீஸ் குல்கந்து தொடரில் திரு முத்து ஐயர் அவர்கள். சுவைபட எடுத்துரைக்கிறார். 

$ இந்தியாவின் முதல் படுக்கைகளுடன் கூடிய திரையரங்கில்.... மெத்தையில் படுத்துக்கொண்டே படம் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? 20-11-2016 அன்றய  கார்த்திகை மாத சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவர் இதழின் "குட்டி கல்கண்டு தகவல்கள்:-" பகுதியில்......

$ திருக்குறளை, வாழ்வதற்கு படிச்சவங்கள விட..! "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்கதான் அதிகம் ..!!!!! என 
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ்களின்  "திருக்குறள் -வம்புக்கு வாங்க" என்கிற புதிய "திருக்குறள்- பேச்சுப்போட்டி" நிகழ்ச்சியில் ...  

திருமதி. நாமகிரி சந்திரசேகர் அவர்கள் எழுதிய  சுட்டீஸ் குழந்தைகளுக்கு, கதையிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? சரியான விடையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதி. 

$ குட்டிக் கதைகள் பகுதியில் இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த  கதை :- 
1. "மாவலியோ மாவலி' என்று குழந்தைகள் கூறிக் களிப்பதேன்?

2. திருக்கார்த்திகை அன்று மாவலி சுத்துவதை செய்வது எப்படி? 

3. கார்த்திகை தீபம் அன்று கோவிலில் சொக்கப்பானை கொளுத்துவது ஏன்? காரணம் என்ன?  

4. குயவர் என்பவர் யார்? புதிதாக வாங்கும் மண்பாண்ட அகல் விளக்குகளை நாம் எப்படி பயன்படுத்தவேண்டு?

$ சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் கேள்வி பதில் பகுதியில்:- ஆன்மீக பழக்கங்கள்.

$ நல வாழ்வு பகுதியில்:- 1.உணவே மருந்தாக 26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை-காய்???

$ பொது அறிவுக் கதை. கட்டுரை, தகவல்கள் பகுதியில்
# சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை பற்றி உங்களுக்குத் தெரியுமா? 

$சமையல் குறிப்புக்கள் / விருந்துக்கு வாங்க பகுதியில்:-
இஞ்சிப் பால்..! அருமைப் பெருமைகள் ????

$ வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள், ஆறு வித்தியாசங்களை கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள் மற்றும் சுட்டீஸ் கதைகளின் மீதிக்கதை அல்லது கதைக்கான விளக்கம் கூறி பரிசுகளை வெல்லுங்கள்  போட்டி என்-8  கார்த்திகை மாதம், இதழ்-8 


$ "திருமதி கங்காதரன்" அவர்கள் சுட்டீஸ்களுக்கு தொகுத்துத்தரும் கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் "திருக்கார்த்திகைத்" திருநாள் பற்றிய சிறப்புக் கட்டுரை...

மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....

அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். சுட்டீஸ்களின் இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... http://gulkanthu.blogspot.in/

நன்றி வைஷாலி வாசகர் வட்டம்.

Thursday 10 November 2016

கார்த்திகை மாதம்:- வைஷாலி வாசகர்வட்ட 33வது சந்திப்பு, புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்கள்.



கற்க கசடற….!!                               !! வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
____________________________________________________________
NCR-NEW DELHI -வைஷாலி வாசகர்வட்ட 33வது சந்திப்பு வரும் 20-11-2016 தேதி 3வது ஞயிறு அன்றய  கார்த்திகை மாதம்:- புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்...  நமது  வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):-  நேரம் மாலை 04.00 மணிக்கு தொடங்கும்... 

கவலைகள் தீர்க்கும் கார்த்திகை மாதம் ...கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் இல்லம்தோறும் கொண்டாடுவர்.

குமராலய தீபம் என்பது முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள். விஷ்ணுவாலய தீபம் என்பது விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள். சர்வாலய தீபம் என்பது ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி. அதாவது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

இருள் சூழ்ந்திருக்கும் இடத்தில் பிரகாசமான ஒளி ஏற்றப்படுமேயானால் அவ்விடத்தில் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவு ஏற்படும். 

முன்னொரு காலத்தில் ஒரு அரசரின் அழகிய மகள், கல்வியிலும் கேள்வியிலும் சிறந்து விளங்கிய கண்கள் தெரியாத குருடரான அரசு கவிஞ்சர் மகன் மீது விருப்பம் கொண்டு, கார்த்திகை மாதத்தில் ஒரு சுபநாளில் திருக்கோவிலில் திருமணம் செய்துகொண்டார். 

மன்னருக்கு தனது மகளின் பிடிவாத திருமணம் பிடிக்காது போனதால் ,இனி அரண்மனையில் உனக்கு இடமில்லை என்று கூறியதோடு உனது வாழ்க்கைக்குத் தேவையான பொருளை பெற்றுக்கொண்டு வேறு எங்காவது சென்று வாழும்படி கூறிவிட்டார். 

அதற்க்கு மன்னரின் மகள் தமக்கு எந்த பொருளும் வேண்டாம் என்று கூறியதோடு, இன்று ஒருநாள் மட்டும் அரண்மனையிலும் இந்த நாட்டின் எவர் வீட்டிலும் விளக்குகள் ஏற்றக்கூடாது என்கிற ஒரு வேண்டுகோளை அரசரின் முன் வைத்தார்.  அதைக்கேட்ட மன்னருக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட... சரி அப்படியே ஆகட்டும் என்று கூறி,  அதற்கான  உத்தரவை செயல்படுத்துங்கள் என ஆணையிட்டார்.  

அந்த நாட்டின் எல்லையில் ஒரு குடுசை வீடை கட்டி, வீடுமுழுவதும் பசுங் கோமியம் சாணம் தெளித்து மொழுகி, வீட்டின் அனைத்து இடங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி, அந்த வீட்டின் வாசலருகே தனது கண்கள் குருடான கணவரை ஸ்ரீ லட்சுமி தேவியாரைப் துதித்து கவிபாடும்படி கூறியதோடு, என்னிடம் அனுமதி பெறாமல் எவரையும் வெளியில் செல்லவோ உள்ளே வரவோ அனுமதிக்கவேண்டாம் என்று கூறினாள்.  பிறகு வீட்டின் உள்ளே சென்று கடவுளுக்கு படைப்பதற்கான நெய்வேத்திய சாதத்தை சமைக்க துவங்கினார். 

வீட்டின் உள்ளே ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் வெளிச்சத்தை தாங்கமுடியாமல் வீட்டின் உள்ளே இருந்த கேட்ட துர் தேவதைகள் வீட்டை விட்டு வெளியேற முயன்றார்கள். அவர்களை தடுத்து நிறுத்திய தனது கணவரின் அருகே சென்ற அரசரின் மகள் அந்த துர் தேவதைகளிடம் இனி எப்போது எந்தக்காரணத்தைக் கொண்டும் இந்த வீட்டிற்குள் நுழையமாட்டோம் என்று சத்தியம் பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே விரட்டியடித்தார். 

சற்று நேரத்திற்குப் பிறகு அந்த நாட்டில் எங்கும் விளக்கு ஏற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடத்திலிருந்த நல்ல தேவதைகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஸ்ரீ மஹாலட்சுமி தேவியருடன், விளக்குகள் ஏற்றப்பட்டு புத்தொளிவுடன் பிரகாசமாக இருக்கும் அந்தக் குடுசைக்குள் நுழைய முற்பட்டார்கள். அப்போது அவர்களை வாசலில் தடுத்து நிறுத்திய  தனது கணவரின் அருகே சென்ற அரசரின் மகள் நல்ல தேவதைகளையும், ஸ்ரீ மஹாலட்சுமி தேவியாரையும் சிறப்பாக வரவேற்று இனி எப்போது எந்தக்காரணத்தைக் கொண்டும் இந்த வீட்டை விட்டு போகமாட்டோம் என்று சத்தியம் பெற்றுக்கொண்டதோடு, அவர் கணவரின் குருட்டுத்தன்மை நீங்கச் செய்து ஏராளமான செல்வங்களைப்பெற்று அந்நாட்டு மன்னரைவிட பலமடங்கு சிறப்பாக தனது வாழ்க்கையை வாழத் தொடங்கினார். 

எனவே கார்த்திகை மாதத்தில் வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றுவதால், கெட்டவர்கள் அழிந்து வீடு பிரகாசமாக ஜொலிப்பதோடு, புத்துணர்ச்சியும் பொதுப்பொலிவும் ஏற்படும். அதனால் நாம் சிறப்பாக செயல்பட்டு ஏராளமான செல்வங்களை சேர்க்கமுடியும் என்பதால், கார்த்திகை மாதத்தின் விளக்கொளியில் புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, புதியதோர் வாழ்க்கையை நாம் பெறுவதால், நமக்குத் தேவையான அனைத்துச் செல்வமும் சிறப்பும் நம்மை தேடி வரும் என்பது உறுதி. 

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்)
தொடர்ந்து ......
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் ...

-மேலும் சிறப்பு விருந்தினர் உரையாடல், நமது வாழ்க்கையை வளமாக்க புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்கள்... பற்றிய  பல சுவையான விவரங்களுக்கு...

வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 33வது வாசகர் வட்ட சந்திப்பு 20-11-2016 தேதி, 3-வது ஞயிறு அன்று. நமது  வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Delhi Metro Railway Station-VAISHALI-Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):- நேரம் மாலை 04.00 மணிக்கு தொடங்கும்... 

# "வை.வா.வி.வ- இனைய வலைப்பதிவர் பூவிதழ் பக்கம் " "குல்கந்து"- இதழின் இந்த மாத ஆசிரியர்?  படைப்பாளர் பக்கம் பகுதி....

# சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... 
1. நமது வாசகர் வட்ட சந்திப்பின் அனைத்துப் போட்டிகளிலும் பங்குபெற்று பரிசினை வெல்லுங்கள்.
2. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு இதழின்  6-வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள்.
3. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு போட்டிக் கேள்வியின் சரியான விடை கூறி பரிசினை வெல்லுங்கள்.
4. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு கதையின் தொடர்ச்சியான "மீதிக் கதையைக்" கூறி பரிசினை வெல்லுங்கள்.
5. எனக்குப் பிடித்த எழுத்தாளர் பகுதியில், கதை / கவிதைப்  புத்தக விமர்சனங்களைக் கூறி பதிப்பாளர்களின் பணமுடிப்பு பரிசைப் பெறுங்கள்.
6. ஒவ்வொரு மாதமும் 3-வது  ஞயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில் கலந்துகொண்டு குலுக்கல் முறையில் திடீர் அதிர்ஷ்ட பரிசுகளை வெல்லுங்கள்.  மேலும் பல பரிசுகளும் உண்டு... 

அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?....

உதவி மற்றும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....


Wednesday 19 October 2016

ஏன் தீபாவளி? பட்டாசு வெடிப்பது எதனால்?

ஏன் தீபாவளி? பட்டாசு வெடிப்பது எதனால்?

#தீபாவ‌ளியை நரக சது‌ர்‌தசி எ‌ன்று‌ம் அழை‌ப்பா‌ர்க‌ள். ஐ‌‌ப்ப‌சி மாத‌த்‌தி‌ல் சூ‌ரிய‌ன் துலா ராசி‌யி‌ல் இரு‌ப்பார். அ‌ப்போது தே‌ய் ‌பிறையான (‌கிரு‌ஷ்ண ப‌ட்ச‌ம்) 14ஆ‌ம் நா‌ளி‌ல் கொ‌ண்டாட‌ப்படு‌ம். ‌தி‌ரியோத‌சி இரவு சது‌ர்த‌சி காலை கொ‌ண்டாட‌ப் பெறுவ‌தினா‌ல் இத‌ற்கு நரக சது‌ர்‌த்த‌சி எ‌ன்று வழ‌ங்க‌ப்படு‌கிறது.


#தீபாவ‌ளி எ‌ன்றா‌ல் ‌‌தீப‌ங்க‌ளி‌ன் வ‌ரிசை எ‌ன்று பொரு‌ள் உ‌ண்டு. ராம‌பிரா‌ன் இல‌‌ங்கை செ‌ன்று ராவணனோடு கடு‌ம் போ‌ர் பு‌ரி‌ந்து, தனது இ‌ல்லாளான ‌(மனை‌வி) சீதா ‌பிரா‌ட்டியாரை ‌மீ‌ட்டு‌க் கொ‌ண்டு அயோ‌த்‌தி‌க்கு ‌திரு‌‌‌ம்‌பி வ‌ந்தா‌ர். த‌ன் வனவாச‌ம் முடி‌ந்து நா‌ட்டை ஆள வரு‌ம் வெ‌ற்‌றி ‌வீர‌ர் ராமரை வரவே‌ற்க ம‌க்க‌ள் ‌மிகவு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சியாக ‌தீப‌ங்களை ஏ‌ற்‌றி கொ‌ண்டாடினா‌ர்க‌ள். அதனா‌ல்தா‌ன் ‌தீபாவ‌‌ளி அ‌ன்று ‌திரு‌விள‌க்குகளை வரிசையாக ஏ‌ற்‌றி வை‌க்கு‌ம் வழ‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக கூறுவா‌ர்க‌‌ள்.


#இற‌க்கு‌‌ம் ‌நிலை‌யி‌ல் இரு‌ந்த நரகாசுர‌ன், ஸ்ரீ கிரு‌ஷ்ண‌னி‌ன் காலை ‌பிடித்துக்கொண்டு, பகவானே எ‌ன்னுடைய சாவு கெ‌ட்டவ‌ர்களு‌க்கு ஒரு பாடமாக இரு‌க்க வே‌ண்டு‌ம். கொடியவனாக நா‌ன் இற‌க்கு‌ம் இ‌ந்நாளை ம‌க்க‌ள் அனைவரு‌ம் அ‌‌ல்ல‌ல் ‌நீ‌ங்‌கிய ந‌ன்நாளாக ம‌ங்களகரமான நாளாக கொ‌‌ண்டாடி ம‌கிழ வே‌ண்டு‌ம் எ‌ன்று வே‌ண்டினா‌ன். ‌கிரு‌ஷ்ண பகவானு‌ம் அ‌வ்வாறே அவனு‌க்கு அரு‌ளினா‌ர். இதனா‌ல் தா‌ன் நரகாசுர‌ன் இ‌ற‌ந்த நாளை‌த்தா‌ன் ‌தீபாவ‌ளியாக கொ‌‌ண்டாடி வரு‌கி‌ன்றன‌ர் எ‌‌ன்று ஜ‌தீக‌ம் கூறு‌கிறது. 

#துலாம் மாதத்தில் வரக்கூடிய சதுர்தசி திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சதுர்தசி திதியும், அமாவாசையும் இணைந்த நேரத்தில்தான் நரகாசுர வதம் நடந்தது என புராணங்கள் கூறுகின்றன. எனவே சதுர்தசி, அமாவாசை சந்திக்கும் நேரமே அல்லது நாளே தீபாவளி கொண்டாடுவதற்கு உகந்த நாளாகும். 

#மேலும் பாட்டசை வெடிப்பது எதனால்-

ஸ்ரீ கிருஷ்ண பகவான் நரகாசுரனின் தலையை துண்டித்தபோது மிகப்பெரிய பிரகாசமான வெளிச்சம் தோன்றியதாம், அதாவது கெட்டவைகள் அழிந்து மிகப்பிரகாசமான நல்லவை பிறந்தது என்று பொருள்படும் விதமாக பட்டாசை வெடித்து அதுபோன்ற ஒரு காட்சியை நாமும் கண்டு களித்திடவே... பட்டாசு வெடி வெடிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்.


இந்த வருடத்தின் 29-10-2016 அன்றய  இனிய தீபாவளி நாளில் மகிழ்ச்சி பொங்கி, என்றென்றும் இன்பம் தழைக்கட்டும் என வைஷாலி வாசகர் வட்டத்தின் சார்பாக எங்களது இனிமையான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

”சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “ வாசகர் வட்டத்தின் :-32வது சந்திப்பில்

அக்டொபர்-31, உலக சிக்கன தினம் (Word Thrift Day). வைஷாலி வாசகர் வட்ட 32வது சந்திப்பு...16-10-2016 ஐப்பசி மாதம் -சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்... 

”சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “

"சேமிப்பு பழக்கத்தை முதலில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்பு பழக்கம் என்பதை, முதலில் கற்றுத்தரும் பாடமாக இருக்கவேண்டும்."  

NCR-NEW DELHI-வைசாலி வாசகர் வட்டத்தின் (16-10-2016):-32வது சந்திப்பில் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தொடர்ந்து அக்டொபர்-31, உலக சிக்கன தினம் (Word Thrift Day). ஐப்பசி மாதம் -சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்.. வாழ்க்கையை வளமாக்கும் உலக சிக்கன தினத்தின் (Word Thrift Day). சிறப்புக்கள் பற்றியும் ஒரு அலசல்.... 



தொடர்ந்து வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பின் எங்கவீட்டு நூலகம்,  படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் (தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்) மற்றும் இந்த மாத தலைப்பைச் சார்ந்த போட்டிகளும் பரிசுகளும்...  என நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்தது..........

29-10-2016- இந்த ஆண்டின் இனிய தீபாவளி நாளில் மகிழ்ச்சி பொங்கி, என்றென்றும் இன்பம் தழைக்கட்டும் என வைஷாலி வாசகர் வட்டத்தின் சார்பாக எங்களது இனிமையான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்.... http://gulkanthu.blogspot.com/



நன்றி வைஷாலி வாசகர் வட்டம்.

படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- அக்டொபர்-2016-ஐப்பசி-மாதம் தண்ணீர் சிக்கனமும் சேமிப்பும்

வைஷாலி வாசகர் வட்டத்தின் "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-7 ஐப்பசி மாத சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... 

"சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டம்" படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- அக்டொபர்-2016-ஐப்பசி-மாதம் தண்ணீர் சிக்கனமும் சேமிப்பும் , வலைப்பதிவு இதழ் போட்டி என்-07.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-11-2016 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-6 செப்டம்பர்-2016-புரட்டாசி-மாத இதழின் பெரியோர்களின் ஆசிபெறும் மாத, வலைப்பதிவு இதழ் போட்டி என்-06. ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,
1. ஆசீர்வதிக்கும் பெரியவரின் நெற்றி குங்கும பொட்டு, 2. ஆசீர்வதிக்கும் தாயாரின் புடவை ஒர (பார்டர்) நிறம், 3.தாயாரின் காது வைர தோடு,  4. ஆசி பெரும் மகனின் மூக்கு கண்ணாடி, 5) ஆசி பெரும் மருமகளின் கை ரவிக்கை நிறம், 6.மாவிலைத் தோரணங்கள் எண்ணிக்கை.
சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 57 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=36, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=14, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=05, ஹிந்தி மொழியில்=02 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்.


Tuesday 4 October 2016

உலக சிக்கன தினம் (Word Thrift Day) சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்... வைஷாலி வாசகர் வட்ட 32வது சந்திப்பு...

கற்க கசடற….!!                               !! வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
____________________________________________________________
NCR-NEW DELHI -வைஷாலி வாசகர்வட்ட 32வது சந்திப்பு வரும் அக்டொபர் 16-10-2016 ஆம் தேதி 3-வது ஞயிறு அன்றய  ஐப்பசி மாதம்:- சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், நமது  வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Delhi Metro Railway Station-VAISHALI-Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):-  நேரம் மாலை 04.00 மணிக்கு தொடங்கும்... 
அக்டொபர்-31, உலக சிக்கன தினம் (Word Thrift Day). வைஷாலி வாசகர் வட்ட 32வது சந்திப்பு...16-10-2016 ஐப்பசி மாதம் -சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்... 

”சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “

"சேமிப்பை முதலில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்பு பழக்கம் என்பதை, முதலில் கற்றுத்தரும் பாடமாக இருக்கவேண்டும்."

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் " படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்)
தொடர்ந்து ......இந்த மாத தலைப்பைச் சார்ந்த போட்டிகளும் பரிசுகளும் ...

-மேலும் சிறப்பு விருந்தினர் உரையாடல், நமது வாழ்க்கையை வளமாக்க சிக்கனமும் சேமிப்பும் பற்றிய  பல சுவையான விவரங்களுக்கு....  வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 32வது வாசகர் வட்ட சந்திப்பு 16-10-2016 தேதி 3வது ஞயிறு அன்று.

# வழக்காடு மன்றம் அல்லது பட்டி மன்றம். அல்லது குழுப் போட்ட அல்லது ஏட்டிக்குப் போட்டி.

# "வை.வா.வி.வ- இனைய வலைப்பதிவர் பூவிதழ் பக்கம் " "குல்கந்து"- இதழின் இந்த மாத ஆசிரியர்?  படைப்பாளர் பக்கம் பகுதி....

# சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... 
1. நமது வாசகர் வட்ட சந்திப்பின் அனைத்துப் போட்டிகளிலும் பங்குபெற்று பரிசினை வெல்லுங்கள்.

2. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு இதழின்  6-வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள்.

3. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு போட்டிக் கேள்வியின் சரியான விடை கூறி பரிசினை வெல்லுங்கள்.

4. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு கதையின் தொடர்ச்சியான "மீதிக் கதையைக்" கூறி பரிசினை வெல்லுங்கள்.

5. எனக்குப் பிடித்த எழுத்தாளர் பகுதியில், கதை / கவிதைப்  புத்தக விமர்சனங்களைக் கூறி பதிப்பாளர்களின் பணமுடிப்பு பரிசைப் பெறுங்கள்.

6. ஒவ்வொரு மாதமும் 3-வது  ஞயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில் கலந்துகொண்டு குலுக்கல் முறையில் திடீர் அதிர்ஷ்ட பரிசுகளை வெல்லுங்கள்.  மேலும் பல பரிசுகளும் உண்டு... 


பின் குறிப்பு :- அனைத்து பரிசுகளும் வாசகர் வட்ட சந்திப்பில் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.   


அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?

உதவி மற்றும் விவரங்களுக்கு (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்.

Monday 26 September 2016

படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- செப்டம்பர்-2016-புரட்டாசி-போட்டி என்-06.


படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- செப்டம்பர்-2016-புரட்டாசி-பெரியோர்களின் ஆசிபெறும் மாத, வலைப்பதிவு இதழ் போட்டி என்-06.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-10-2016 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடைஎழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-5 ஆவணி -மாத இதழின் சகோதர, சகோதரிகள் மாத, வலைப்பதிவு இதழ் போட்டி என்-05.("ரக்ஷா பந்தன் - சகோதர சகோதரி வாழ்த்துக்கள்")6-ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,
1. ராக்கி கயிறு, 2. பரிசு, 3. கையில் லட்டு, 4. தலையில் பூ, 5. சகோதரன் கையில் ராக்கி, 6. தட்டில் தின்பண்டம்.

சரியான விடையை 31 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=11, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=14, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=03, ஹிந்தி மொழியில்=03 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.

மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்.... http://gulkanthu.blogspot.com/

தாத்தா பாட்டிகள் உள்ள வீடு" ஆயிரக்கணக்கான புத்தகங்களை கொண்ட நூலகத்திற்கு சமம் !


தாத்தா பாட்டிகள் உள்ள வீடு" ஆயிரக்கணக்கான புத்தகங்களை கொண்ட நூலகத்திற்கு சமம் ! 

செப்டம்பர்18 - உலக அறிவாளர் தினமான 18-09-2016 அன்று புரட்டாசி மாத வாசகர் வட்டத்தின் :-31வது சந்திப்பில், 

முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தொடர்ந்து செப்டம்பர்18 - உலக அறிவாளர் தினம் பற்றியும், ஆன்றோர்கள் / சான்றோர்கள் / பெரியோர்களின் அறிவுரைகளையும் ஆசிகளையும் பெற்று வாழ்க்கையை வளப்படுத்தும் புரட்டாசி மாதத்தின் சிறப்புக்கள் பற்றியும் ஒரு அலசல்.... 

தொடர்ந்து வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பின் எங்கவீட்டு நூலகம், படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் (தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்) மற்றும் இந்த மாத தலைப்பைச் சார்ந்த போட்டிகளும் பரிசுகளும்... என நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்தது..........



மேலும் புரட்டாசி  மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்.... http://gulkanthu.blogspot.com/



நன்றி வைஷாலி வாசகர் வட்டம்.

Saturday 10 September 2016

குடிசைப்பகுதியில் 3ம் வகுப்பு மாணவியின் நூலகம் :-

குடிசைப்பகுதியில் 3ம் வகுப்பு மாணவியின் நூலகம் :-

இந்தியாவின், மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் போபால் நகரில் உள்ள அரேரா குன்று அருகேயுள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமி முஸ்கான் ஹ்ரிவார். மூன்றாம் வகுப்பில் படிக்கும் முஸ்கான், தனது வீட்டில் நூலகத்தை நிறுவி செயல்படுத்திவருகிறார். அவருக்கு வைஷாலி வாசகர் வட்டத்தின் சார்பாக 50 சிறுவர் கதை புத்தகங்களை பரிசாக அனுப்பிவைக்க முடிவுசெய்துள்ளோம்.
மூன்றாம் வகுப்பில் படிக்கும் முஸ்கான், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும், வீட்டின் வாசலில் நூறறுக்கும் அதிகமான புத்தகங்களை கடைவிரித்து, அப்பகுதியில் உள்ள எழுத்தறிவில்லாத பிள்ளைகளுக்கு எழுத்தறிவிக்கும் ‘இறைவி’யாக மாறிவிடுகிறார்.

அப்பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கூடம் ஒன்று நன்கொடையாக அளித்த 25 புத்தகங்களை கொண்டு தனது வீட்டின் வாசலில் கடந்த ஆண்டு ஒரு சிறிய நூலகத்தை முஸ்கான் ஆரம்பித்தார்.

அந்த புத்தகங்களில் உள்ள ராஜா-ராணி கதைகள் மற்றும் நமது தாய்நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை கதை வடிவில் தனது மழலை மொழியில் படிப்பறிவில்லாத அப்பகுதி பிள்ளைகளுக்கு கற்பிக்கும் முஸ்கானிடம் தற்போது நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன.

படிக்க தெரிந்த சில சிறுவர் - சிறுமியர் இந்த கட்டணமில்லாத நூலகத்தில் இருந்து புத்தகங்களை இரவலாக கொண்டுசென்று, வாசித்துவிட்டு, மறுநாள் கொண்டுவந்து திருப்பி தந்துவிட்டு, வேறு புத்தகங்களை கொண்டு செல்கின்றனர்.

வேறு சிலர் முஸ்கான் வீட்டு வாசலிலேயே அமர்ந்து படித்துவிட்டு, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவரிடம் விளக்கம் கேட்டு தெளிவு பெறுகின்றனர்.

நன்றாக படித்து, எதிர்காலத்தில் டாக்டராக வேண்டும் என்பதுதான் எனது எதிர்கால இலட்சியம் என்று கூறும் மஸ்கானின் கல்வித் தொண்டை பாராட்டி மத்திய அரசின் சார்பில் விரைவில் இவருக்கு நித்தி ஆயோக் திட்டத்தின்கீழ் ‘சிந்தனை தலைவர்’ பட்டம் வழங்கப்படவுள்ளது, குறிப்பிடத்தக்கது.

இந்த சிறு வயதிலேயே சமூக மாற்றத்துக்காக பாடுபடும் முஸ்கானின் சேவை எங்களை பெருமைப்படுத்தியுள்ளது என இவரது தாயார் திருமதி மாயா அவர்கள் கூறியதை போல ஒவ்வொரு மாணவ மாணவியரும் அவர்களால் முடிந்த அளவில் அவர்களின் வீட்டிலேயே ஒரு நூலகத்தை நிறுவி நாட்டுக்கும் வீட்டிற்கும் பெருமைசேர்க்கவேண்டும்.

நன்றிகளுடன் வைஷாலி வாசகர் வட்டம்.

Wednesday 7 September 2016

18-09-2016 உலக அறிவாளர் தினம், வைஷாலி வாசகர்வட்ட 31வது சந்திப்பு

கற்க கசடற….!!                               !! வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
____________________________________________________________
NCR-NEW DELHI -வைஷாலி வாசகர்வட்ட 31வது சந்திப்பு வரும் செப்டம்பர்-18 - உலக அறிவாளர் தினமான 18-09-2016 தேதி 3வது ஞயிறு அன்றய  புரட்டாசி மாதம்:- ஆன்றோர்கள் / சான்றோர்கள் / பெரியோர்களின் அறிவுரைகளையும் ஆசிகளையும் பெற்று வாழ்க்கையை வளப்படுத்தும் மாதக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள், நமது  வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):-  நேரம் மாலை 04.00 மணிக்கு தொடங்கும்... 

செப்டம்பர்18 - உலக அறிவாளர் தினமான 18-09-2016 அன்று  புரட்டாசி மாதம்:- ஆன்றோர்கள் / சான்றோர்கள் / பெரியோர்களின் அறிவுரைகளையும் ஆசிகளையும் பெற்று வாழ்க்கையை வளப்படுத்தும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும். 
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் எங்க வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்)
தொடர்ந்து ......இந்த மாத தலைப்பைச் சார்ந்த போட்டிகளும் பரிசுகளும் ...

-மேலும் சிறப்பு விருந்தினர் உரையாடல், நமது வாழ்க்கையை வளமாக்க வழிநடத்திச்சென்ற பெரியவர்கள் என  பல சுவையான விவரங்களுக்கு வாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 31வது வாசகர் வட்ட சந்திப்பு 18-09-2016 தேதி 3வது ஞயிறு அன்று.

# வழக்காடு மன்றம் அல்லது பட்டி மன்றம். அல்லது குழுப் போட்ட அல்லது ஏட்டிக்குப் போட்டி.

# "வை.வா.வி.வ- இனைய வலைப்பதிவர் பூவிதழ் பக்கம் " "குல்கந்து"- இதழின் இந்த மாத ஆசிரியர்?  படைப்பாளர் பக்கம் பகுதி....

# சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... 
1. நமது வாசகர் வட்ட சந்திப்பின் அனைத்துப் போட்டிகளிலும் பங்குபெற்று பரிசினை வெல்லுங்கள்.
2. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு இதழின்  6-வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள்.
3. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு போட்டிக் கேள்வியின் சரியான விடை கூறி பரிசினை வெல்லுங்கள்.
4. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு கதையின் தொடர்ச்சியான "மீதிக் கதையைக்" கூறி பரிசினை வெல்லுங்கள்.
5. எனக்குப் பிடித்த எழுத்தாளர் பகுதியில், கதை / கவிதைப்  புத்தக விமர்சனங்களைக் கூறி பதிப்பாளர்களின் பணமுடிப்பு பரிசைப் பெறுங்கள்.
6. ஒவ்வொரு மாதமும் 3-வது  ஞயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில் கலந்துகொண்டு குலுக்கல் முறையில் திடீர் அதிர்ஷ்ட பரிசுகளை வெல்லுங்கள்.  மேலும் பல பரிசுகளும் உண்டு... 

பின் குறிப்பு :- அனைத்து பரிசுகளும் வாசகர் வட்ட சந்திப்பில் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.   

அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?
உதவி மற்றும் விவரங்களுக்கு (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்.

Sunday 21 August 2016

பறவை நோக்குதலில் (Bird Watching) உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? இதோ உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு.......

பறவை நோக்குதலில் (Bird Watching) உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? இதோ உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு....... 

வருகிற 04 செப்டம்பர் (04-09-2016) ஞாயிறு அன்று "நமது அவ்வை தமிழ்ச்சங்கமும்", NCR-NEW DELHI-வைஷாலி வாசகர் வட்டமும் இணைந்து,  வைசாலி திரு.வி.சுப்ரமண்யம், ஆராய்ச்சியாளர்-பறவை நோக்குதல் (Bird Watching & Research), மற்றும் புது தில்லி அதன் சுற்றுப்புற வட்டத்தின் "ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு  குழு உறூப்பினர்"அவர்களின் தலைமை வழிகாட்டுதலின்படி, பறவைகள் நோக்குதல்  மற்றும் கணக்கெடுப்பது பற்றிய இலவச விழிப்புணர்வு பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்களில், தேர்ந்தெடுக்கப்படும் 25 நபர் கொண்ட ஒரு குழு மட்டும் 04-09-2016 அன்று புதுதில்லியின் "தில்லி-ஒக்லா பறவைகள் சரணாலயத்தில்- DELHI-'OKHLA' BIRDS SANCTUARY" விடியற்காலை 6 மணியிலிருந்து மதியம் -11 மணி வரை சிறப்பு பயிற்சியளிக்க இருப்பதால், தங்களது விருப்பத்தை கீழ் கண்ட தொலைப்பேசியின் வழியிலோ அல்லது மின் அஞ்சலிலோ 30-08-2016 முன்பாக தொடர்புகொண்டு தெரியப்படுத்தவேண்டும்.

பயிற்சி விதிமுறைகள்:-
1. பறவை நோக்குதலில் "அமைதி காப்பது" மற்றும் "பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது மிக மிக அவசியம் என்பதால் " மிக அதிக தூரம் கரடு முரடான காட்டுப் பாதையில் நடக்கவேண்டியிருப்பதால்" பல பாதுகாப்பு அம்சங்களை அவசியம் தெரிந்துகொண்டு அவற்றை பின்பற்றவேண்டும் என்பதால், முதல் 15நிமிடம் பாதுகாப்பு விதிமுறை பற்றிய பயிற்சியளிக்கப்படும்.
    
2. பயிற்சியில் கலந்துகொள்பவர்கள், உடல் முழுதும் பாதுகாப்பாக மூடியிருக்கும் வகையில், முழு கை சட்டையையும், முழு கால் மூடிய நிலையில் அணியும் உடையை அணியவேண்டும்.

3. அணியும் உடைகள் மெல்லிய வெளிர் நிறத்திலான வண்ண உடைகளை அணியவேண்டும், (பறவைகள் பயந்து விரட்டும் அடர்ந்த நிற உடைகளை தவிர்க்கவேண்டும். மேலும்  வெண்மை நிற உடையையும் தவிர்க்கவும்).

4. கரடு முரடான வனப்பகுதி என்பதால் கால்களில், பாதம் முழுதும் மூடும் வகையிலான காலணி அணியவேண்டும் (அதாவது பயிற்சி காலணி அல்லது விளையாட்டுக் காலணி (Can wash-sports-shoes) அணியவேண்டும்)    

4. மூன்று  மணி நேரம் வனப்பகுதியில் சுற்றுவதர்க்குத் தேவையான தண்ணீர் மற்றும் எளிய சக்திதரும் உணவுப்பொருள்களை கைப்பையில் உடன் எடுத்துவரவேண்டும். 

5. விருப்பமுள்ளவர்கள் தொலைநோக்கி மற்றும் புகைப்பட கருவிகளை எடுத்துவரலாம்.

6. சொந்த வாகனங்களில் வருபவர்கள், பறவைகள் சரணாலயத்தின் நுழைவாயிலில் வாகன நுழைவு சீட்டு மற்றும்  நிறுத்துமிட கட்டணம் செலுத்தி, அதற்க்கான சீட்டை பெற்றுக்கொள்வது அவசியம்.      

7. சரணாலயத்தின் நுழைவாயிலுக்கு 6.15am நிமிடங்களுக்குப் பிறகு வருபவர்கள் பயிற்சியில் இடம்பெரமுடியாது என்பதை கருத்தில் கொள்ளவும்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி:- "கிழக்கு தில்லியின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும்":- 

1. வைஷாலி மற்றும் வசுந்தரா பகுதியில் வசிப்பவர்கள் :- திரு.கோபால கிருஷ்ணன்(Mr. Gopalkrishnan) +91-9717236514. மற்றும் திரு வி. சுப்பிரமணியம்(Mr. V.Subramanyam) +91-9868216038.  என்கிற தொலைபேசி என்னில் தொடர்புகொள்ளவேண்டும்.  

2. இந்திராபுரம் மற்றும் நொய்டா பகுதியில் வசிப்பவர்கள்:- நொய்டா(N.O.I.D.A) பகுதியில் வசிப்பவர்கள்:- அவ்வை தமிழ் சங்கம்:- மருத்துவர் ஆர். வளவன்(Dr.R.Valavan) +91-9312309186. என்கிற தொலைபேசி என்னில் தொடர்புகொள்ளவேண்டும்.

4.தொடர்புகொள்ளவேண்டிய மின் அஞ்சல் /E_mail:- "VAISHALIREADERSCIRCLE@GMAIL.COM" (or) "AVVAITAMILSANGAM@GMAIL.COM"

பறவை நோக்குதலின் பயன்கள்:- 
பறவைகளைப் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சிகள், மற்றும் திட்டங்களில், பறவைகள் கணக்கெடுப்பு சேவைப் பனி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

சர்வதேச அளவிலான இந்தக் கணக்கெடுப்புக்கு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (கிரேட் பேக்யார்டு பேர்டு கவுன்ட்) என்று பெயர். ஃபிப்ரவரி 14 முதல் 17 வரை (வெள்ளி முதல் திங்கள் வரை) இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபடுவதற்கு நீங்கள் பெரிதாக மெனக்கெட வேண்டியது இல்லை. பறவை நோக்குதலில் ஆர்வம் இருந்தால் போதும். உங்கள் வீட்டு மாடி, புழக்கடை, முன்புறம் உள்ள தோட்டம், வீட்டுக்கு அருகில் உள்ள பூங்கா, ஏரி, நீர்நிலை போன்ற இயற்கை செழிக்கும் ஏதாவது ஒரு இடம் போதும்.

குறைந்தபட்சம் 15 நிமிடங்கள், அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பறவை களைக் கண்காணித்து, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். நீங்கள் பார்த்த பறவை வகைகள், அவற்றின் எண்ணிக்கை போன்ற வற்றைக் குறித்துக்கொள்வது அவசியம். எல்லாப் பறவைகளையும் அடையாளம் காண முடியாவிட்டாலும் பரவாயில்லை, உங்களால் கண்டுபிடிக்க முடிந்த பறவை வகைகளைப் பதிவு செய்தால் போதும்.

இந்தக் கணக்கெடுப்பு பல்வேறு முக்கியக் கேள்விகளுக்கு விடையளிக்க உதவும். இந்தியாவில் உள்ள பறவைகளின் நிலைமையை இந்தக் கணக்கெடுப்பு மூலம் புரிந்துகொள்ளலாம். வாழிட மாறுதல்களால் பறவைகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன, தட்பவெப்பநிலை மாற்றங்கள், பறவைகளின் எண்ணிக்கையும் பரவலும் மாறுகின்றனவா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

இந்தத் திட்டம் மூலம் விஞ்ஞானிகளுக்கான ஆராய்ச்சித் தகவல்களை ஆர்வலர்களும் திரட்டித் தர முடிகிறது. இந்தக் கணக்கெடுப்பு உலகின் மிகப் பெரிய மக்கள் அறிவியல் திட்டங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இந்தக் கணக்கெடுப்பில் 141 நாடுகள் பங்கேற்றன. 5.5 கோடி பறவை நோக்கர்கள் 5,000+ பறவை வகைகளைப் பதிவு செய்திருந்தார்கள். இந்தியாவில் 600க்கும் மேற்பட்ட பறவைகள் பற்றி 400க்கும் மேற்பட்ட பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதில் 89 பட்டியல்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை. அது நாட்டிலேயே இரண்டாவது அதிகப் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் பறவை பற்றிய பதிவுகளை www.BirdCount.org இல் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு இந்த இணையப் பக்கத்தைப்  பாருங்கள்: gbbc.birdcount.org.

அன்புடன் கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்.
"வைஷாலி வாசகர் வட்டம்"(http://vaishalireaderscircle.blogspot.in/)
"சுட்டீஸ்- குல்கந்து" வலைப்பதிவர் இதழ்..  http://gulkanthu.blogspot.in/