வைஷாலி வாசகர் வட்டம்: July 2016

FREE JOBS - JUST CLICK HEAR

Sunday 17 July 2016

வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ்கள்.இளையவர்களின் வலைப்பதிவர் இதழ்= 04 ஆடி மாதம்-தேதி 17-07-2016.

வணக்கம், தாங்களின் வருகைக்கு நன்றி......
NCR-NEW DELHI - வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ்கள்.... இந்தமாத (ஆடி மாதம் 17-07-2016) வலைப்பதிவர் இதழில் பல ஆச்சரியமான விவரங்களைத் தொகுத்து தந்திருக்கிறார்கள்..... 

இதழ்= 04 ஆடி மாதம்- தேதி 17-07-2016 இதழின் சிறப்பு:- இந்த மாத இளையவர்களின் வலைப்பதிவர் இதழின் சிறப்பு பகுதியாக:- ஆடி மாத ஆன்மீக மாதக் கொண்டாட்டங்கள். என  ஏராளமான ஆன்மீக செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட "சுட்டீஸ் -குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்.... அவர்கள் தொகுத்துத் தந்த  பல ஆன்மீக செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக 17-07-2016 அன்று வெளியாகிறது.  "http://gulkanthu.blogspot.com"
முதலில் எங்கவீட்டு நூலகம் பகுதி, தொடர்ந்து ஆன்மீக புத்தகங்கள் பற்றிய ஒரு அலசல்... ( புத்தகங்கள் / எழுத்தாளர்கள்/ பதிப்பகங்கள்) 

$ ஆடி மாத வாசகர் வட்ட சந்திப்பு :- ஆன்மீக மாதக் கொண்டாட்டங்கள். முதல் பதிவாக குட்டி கல்கண்டு தகவல்கள்:-

$ "ஆடிச் செவ்வாய் தேடிக்குளி" என்று பழமொழி கூறும் கருத்து என்ன? 

$ சிறுகதைகள் பகுதியில் :- சரியான விடைகளைக் கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள் பகுதி.  விளையாட்டு கார் (மகிழுந்து)- சிந்திக்கவைக்கும் கதையும் கேள்வியும்?  


# சரியான,  புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதி.

# சிறு கதைகள்:- கதை கதையாம் காரணமாம் பகுதியில்:- மண்ணெண்ணையில் லட்டு பிரசாதமா?  இந்த உண்மைச் சம்பவம் எங்கு ? எப்போது நடந்தது? 

$ ஆன்மீக மாத கட்டுரைகள்:- உங்கள் கவனத்திற்கு வழங்கியவர்:- திரு முத்துக் கிருஷ்ணன் அவர்கள் .

$ ஆன்மீக மாத கட்டுரைகள்:- உலகிலேயே மிகச்சிறந்த புண்ணிய பூமி  எது? ஏன்? 

$ பொது அறிவுத் தகவல்கள் பகுதியில்:-(விஞானமும் மெய்ஞானமும்):

$ சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் கேள்வி பதில் பகுதியில்:-  எட்டுக்கால் பூச்சியான சிலந்திக்கு கோவில் எங்குள்ளது? அதற்கான சிறப்புக் காரணம் என்ன? 

$ சமையல் குறிப்புக்கள் / விருந்துக்கு வாங்க பகுதியில்:- ஆடியிலே வாடைக்காற்று, சுக்குமல்லி காபி குடிக்க வாங்க மற்றும் செய்முறை. 

$ பாட்டி சொல்லைத் தட்டாதே பகுதியில்- வாழ்வை வளமாக்கும் விரதங்களும் அதன் பயன்களும்.

$ நல வாழ்வு பகுதியில்: முற்றிய மஞ்சள் காமாலை நோயினால் பாதித்தவர்களுக்கு முதுகில் பழுக்க காச்சிய கம்பியினால் சூடு போடும் பண்டையகால அதிர்ச்சியூட்டும் வைத்தியமுறை:-

$ "கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"- பயிற்சி வகுப்பில் இந்தமாதம்-நவராத்திரி கொலு பிசினஸ் செய்யலாம் வாங்க:- வழங்கியவர்:- புது தில்லி திருமதி விசாலம் மாமி அவர்கள். அன்னையின் அருள்  என்கிற தமிழ் வலைப்பதிவிலிருந்து. .........
$ சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா?" படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்-

# சரித்திரம் முக்கியம் பகுதியில்:- தேவலோக "புஷ்ப விமானம்" பற்றிய ஓவியமும் அதன் ரகசியங்களும்..
...என இன்னும் பல சுவையான விவரங்களோடு, வைஷாலி வாசகர் வட்டத்தின் 5-வயது குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் என இளையவர்கள் சிறப்பாக அவர்களது படைப்புகளை அவர்களே வலைப்பதிவில் பதிக்கும் பொறுப்பேற்றுக்கொண்டு, வலைப்பதிவில் விளையாடிவருகிறார்கள். மறந்துவிடாதீர்கள் ஒவ்வொரு மாதமும், ஆங்கில மாதத்தின் 3ம் ஞாயிறு அன்று, இரவு 9மணி அளவில், வெளியாகும் NCR - NEW DELHI-வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்களின் குலு குலு "குல்கந்து" இலவச வலைப்பதிவர் மாத இதழ்... இந்தமாதம் 17-07-2016 அன்று இரவு 9 மணிக்கு, ஆடி மாத இதழ்-04 வெளியாகிறது.  "http://gulkanthu.blogspot.com/"

Wednesday 6 July 2016

NCR-NEW DELHI -வைஷாலி வாசகர்வட்ட 29வது சந்திப்பு வரும் 17-07-2016ம் தேதி, 3வது ஞயிறு அன்று

கற்க கசடற….!!                               !! வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
____________________________________________________________

NCR-NEW DELHI -வைஷாலி வாசகர்வட்ட 29வது சந்திப்பு வரும் 17-07-2016ம் தேதி, 3வது ஞயிறு அன்று வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):-  நேரம் மாலை 04.00 மணிக்கு தொடங்கும்... 
ஆடி மாதம்:- ஆன்மீக மாதக் கொண்டாட்டங்கள்:- ஆன்மீகம் சார்ந்த தலைப்புகளில் அனைத்து நிகழ்ச்சிகளும் போட்டிகளும் அமைந்திருக்கும். . :-
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் எங்க வீட்டு "நூலகம் " படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் எங்க வீட்டு தோட்டம்......
தொடர்ந்து ......இந்த மாத தலைப்பைச் சார்ந்த ...
0. திருக்குறள் போட்டி 
1. புத்தகம் படிக்கும் போட்டி (புதியதாக தொடக்கம்) 
2. பேச்சுப்போட்டி 
3. பாட்டுப்போட்டி 
4. கதைப்போட்டி 
5. கவிதைப்போட்டி
6. கட்டுரைப் போட்டி  
7. புகைப்படப் போட்டி 
8. சித்திரப் போட்டி,
9. சிரிப்புப் போட்டி,
10 "சரித்திரம் முக்கியம்" பகுதி...."புஷ்பவிமானம் பற்றிய சித்தன்னவாசல் ஓவியம் கூறுவது என்ன மேலும் ஆன்மீகம் சார்ந்த சரித்திர முக்கியத்துவம், மற்றும்  வரலாற்றுச் சம்பவங்கள் பற்றிய ஒரு பார்வை "-மேலும் பல சுவையான விவரங்களுக்கு வாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 29வது வாசகர் வட்ட சந்திப்பு 17-07-2016 தேதி 3வது ஞயிறு அன்று.

12. வழக்காடு மன்றம் அல்லது பட்டி மன்றம். அல்லது குழுப் போட்டி.
13. "வை.வா.வி.வ- இனைய வலைப்பதிவர் பூவிதழ் பக்கம் " - இதழின் இந்த மாத ஆசிரியர்?  படைப்பாளர் பக்கம் பகுதி....
14. சிறப்பு போட்டிப் பரிசு, விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... 

அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?
உதவி மற்றும் விவரங்களுக்கு (+91-9717236514).

NCR-NEW DELHI என்று குறிப்பிடும் நமது தேசிய தலைநகரான புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட எல்லைப்பகுதியில் அமைந்த ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேச மாநில எல்லைப்பகுதியை ஒட்டிய இடங்களில்  வசிக்கும் தமிழர்களும், கிழக்கு தில்லியின்  "வைஷாலி" டெல்லி மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்த செக்டர்-4 மையப் பூங்காவில் (Central Park) நடைபெறும் நமது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பு  நிகழ்ச்சியில் பங்குபெறலாம். 
1. நமது வாசகர் வட்ட சந்திப்பின் அனைத்துப் போட்டிகளிலும் பங்குபெற்று பரிசினை வெல்லுங்கள்.
2. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு இதழின்  6-வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள்.
3. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு போட்டிக் கேள்வியின் சரியான விடை கூறி பரிசினை வெல்லுங்கள்.
4. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு கதையின் தொடர்ச்சியான "மீதிக் கதையைக்" கூறி பரிசினை வெல்லுங்கள்.
5. எனக்குப் பிடித்த எழுத்தாளர் பகுதியில், கதை / கவிதைப்  புத்தக விமர்சனங்களைக் கூறி பதிப்பாளர்களின் பணமுடிப்பு பரிசைப் பெறுங்கள்.
6. ஒவ்வொரு மாதமும் 3-வது  ஞயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில் கலந்துகொண்டு குலுக்கல் முறையில் திடீர் அதிர்ஷ்ட பரிசுகளை வெல்லுங்கள்.  மேலும் பல பரிசுகளும் உண்டு 

பின் குறிப்பு :- அனைத்து பரிசுகளும் வாசகர் வட்ட சந்திப்பில் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுக்கொள்ளவேண்டும். 

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்.