வைஷாலி வாசகர் வட்டம்: February 2017

FREE JOBS - JUST CLICK HEAR

Sunday 19 February 2017

"மாசி மாத-சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்".

மாசி மாத சுட்டீஸ் குல்கந்து இதழின் http://gulkanthu.blogspot.in/ சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்".
படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் - பிப்ரவரி-2017 மாசி-மாதம் அன்பு/ நட்பு/ குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்-வலைப்பதிவு இதழ் போட்டி என்-11.



சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-03-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

முழு விவரங்கள் வைஷாலி வாசகர் வட்ட மாசி மாத சுட்டீஸ் குல்கந்து இதழின் "http://gulkanthu.blogspot.in" வலைப்பதிவில் காண்க.


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....

Wednesday 15 February 2017

சென்ற மாத ஆறு- வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை & பரிசு.

சென்ற மாத ஆறு- வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை:- "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-10  சனவரி-2017 தை-மாதம் "பொங்கலோ பொங்கல்"  நன்றி கூறும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்- வலைப்பதிவு இதழ் போட்டி என்-10 ஆறு- வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை
1) காகித தோரணம்  2) வானத்தில் பறவைகள் பறப்பது 3) மாட்டின் நெற்றியில் குங்குமப்பொட்டு 4) விவசாயியின் சட்டை  5) பொங்கல் பானை கைக்கரண்டி 6) வழக்கமான ஓவியம் வரைந்தவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கையொப்பத்தில் வட்டம் அல்லது பெயரின் கீழ் கோடிட்டு காட்டுதல்.  

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 34 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=12, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=10, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=12, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....

Wednesday 8 February 2017

வைஷாலி வாசகர்வட்ட 36வது சந்திப்பு, மாசி மாதம்:- அன்பு/நட்பு/குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.

மாசி மாதம்:- வைஷாலி வாசகர்வட்ட 36வது சந்திப்பு,  அன்பு/நட்பு/குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும்நிகழ்ச்சிகளும்.
"வாசிப்பு என்பது புத்தகத்திற்கு மட்டுமில்ல வாத்தியக் கருவிகளுக்கும் பொருந்தும் ....வாசிப்போம்.... சுவாசிப்போம்" வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 36வது வாசகர் வட்ட சந்திப்பு 19-02-2017 தேதி, 3-வது ஞயிறு அன்றய மாசி மாதம்:- அன்பு / நட்பு / குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும். நமது  வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):-  நேரம் மாலை 03.00 மணிக்கு தொடங்கும்... 

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை. இந்த சிறப்புகளெல்லாம் அந்த மாதங்களில் அமையும் சிறப்புவாய்ந்த நாட்களை நினைவுகூறுமாறு, வழிபாடுகளையும்,  திருவிழாக்களையும் கொண்டே அமைகின்றன. அவ்வகையில் மாசி மாதத்தின் சிறப்பு சிலவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

பிப்ரவரி மாதம் (BOOK LOVERS MONTH) புத்தகக் காதலர், புத்தகப் பிரியர்களின் மாதமாக கொண்டாடப்படுவதால் பல புத்தக பதிப்பகத்தினர், மற்றும் புத்தக விற்பனையாளர்கள் பிப்ரவரி மாதம் முழுவதும் புத்தகங்களை வாங்கும் நண்பர்களுக்கு சிறப்பு கழிவு, தள்ளுபடிவிலையில் மற்றும் இலவச புத்தக இணைப்புகளையும் தருகிறார்கள் நீங்களும் உங்களுக்குத் பிடித்த புத்தகங்களை மிகக் குறைந்த விலையில் பெற்று பயனடையுங்கள் ...மேலும் காதலர் தினம்தான்."வாலண்டைன்-தினம்" பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளவேண்டுமா வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=11 மாசி மாதம்- தேதி /நாள் 19-02-2017. பிரவரி 3வது ஞாயிறு அன்று.http://vaishalireaderscircle.blogspot.in" "எழுத்துக்களிடம் எனக்குப்  பிடித்ததே, அவை நம் கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்" என்கிறார்கள் "வாசிப்பு என்பது புத்தகத்திற்கு மட்டுமில்ல வாத்தியக் கருவிகளுக்கும் பொருந்தும் ....வாசிப்போம்.... சுவாசிப்போம்".... "சுட்டீஸ்-குல்கந்து" மாசி மாத வலைப்பதிவர் பூவிதழ்-11"http://gulkanthu.blogspot.in/"  

மாசி மாத ஆன்மீக சிறப்பு :-
@ மாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியையே ஷட்திலா ஏகாதசி என்பர். திருமாலை வழிபடுவதுதான் இந்த நாளின் முக்கியமான நோக்கம்.  

@ மாசி மாத அமாவாசை நாளில், அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறும். இவ்விழாவின் அடிப்படை- சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான். 

@ திருவாலங்காட்டில்- நடராஜர் சந்நிதியின் பின்புறம் ஒரு சுவர் தடுக்கப்பட்டிருக்கும். அதனுள் காரைக்கால் அம்மையார் இருப்பதாக ஐதீகம். இதைத்தான் ஆலங்காட்டு ரகசியம் என்பார்கள். அம்மையார் இறைவனுடன் ஒன்றியது மாசி மாதத்தில்தான்.

@ மாசி மாதத்தில் நாடகம் போடுவதாக, வேடம் கட்டி ஆடுவதாக வித்தியாசமான வேண்டுதல் செய்யும் கோவில் பற்றி தெரிந்துகொள்ள வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து"  இதழ்=11 மாசி மாதம்-தேதி 19-02-2017.

மேலும் பல சுவையான விவரங்களுக்கு, குட்டி கல்கண்டு, சிறுகதை போட்டி, ஆறு வித்தியாசங்களை கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள் போன்ற பல நிகழ்ச்சிகளுக்கு வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட 36வது சந்திப்பு,  அன்பு/நட்பு/குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும். 
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்)
தொடர்ந்து ......

"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... 
அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?.... உதவி மற்றும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....