வைஷாலி வாசகர் வட்டம்: April 2016

FREE JOBS - JUST CLICK HEAR

Thursday 28 April 2016

கோடை கொண்டாட்டம்...அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் வட்டம்

கோடை கொண்டாட்டம் NCR-NEW DELHI....அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் இணைந்து வழங்கிய " கோடை கொண்டாட்டம்" - பொன் மாலைப் பொழுதில் பொழுது போக்கு விளையாட்டுகள்..24.04.2016 நிகழ்சிகளின் புகைப்பட தொகுப்புக்கள்....






























Sunday 24 April 2016

சுட்டீஸ்களின் வலைப்பதிவர் பக்கம்...."தமிழ் ரோஜாக்களின் குட்டீஸ் குல்கந்து" வாசியுங்கள்

மாதம் ஒருமுறை இது எங்கள் வலைப்பதிவர் பக்கம்...."தமிழ் ரோஜாக்களின் குட்டீஸ் குல்கந்து" வாசியுங்கள் உங்களின் மனம் குளிர்ச்சியடையும்.  வைஷாலி வாசகர் வட்ட, சுட்டீஸ் பதிவுகள் ....

கோடை கொண்டாட்டம் ....அவ்வை தமிழ் சங்கம் மற்றும் வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் இணைந்து வழங்கிய " கோடை கொண்டாட்டம்" - பொன் மாலைப் பொழுதில் பொழுது போக்கு விளையாட்டுகள்..24.04.2016 நிகழ்சிகளின் தொகுப்புக்கள்.... வருகை தந்து எங்களை மகிழ்விக்க ஆவலுடன் அழைக்கிறோம் ... நன்றி இப்படிக்கு நட்புடன் ...வைஷாலி வாசகர் வட்ட வாசமிகு "சுட்டீஸ் ரோஜாக்கள்".http://gulkanthu.blogspot.in/

Thursday 21 April 2016

வாங்க! பழகலாம்! " கோடை கொண்டாட்டம்" - பொன் மாலைப் பொழுதில் பொழுது போக்கு விளையாட்டுகள்


கோடை கொண்டாட்டம் !
அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் இணைந்து வழங்கும் " கோடை கொண்டாட்டம்" - பொன் மாலைப் பொழுதில் பொழுது போக்கு விளையாட்டுகள்



நாள் : 24.04. 2016
தினம் : ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4 முதல் 8 மணி வரை
இடம்: வைஷாலி சிவன் கோவில், செக்டர் 4 ( தஸ் மஞ்சில் என அழைக்கப்படும் 10 அடுக்கு மாடி கட்டிடம் வருமான வரி குடியிருப்பு அருகில்), வைஷாலி. NCR-New Delhi.



நிகழ்ச்சி நிரல்:-



தமிழ்த் தாய் வாழ்த்து
வரவேற்புரை



நிகழ்சிகள்:-

1. யார் இவர், ஊமை விளையாட்டு - உங்கள் பொது அறிவுக்கு ஒரு சவால். ஒரு பிரபல மனிதரை கண்டுபிடிக்கும் உற்சாகம் மிக்க குழு விளையாட்டு. வயது வரம்பு: அனைவரும்.

2. இசை உணவு (Food blast) - இசை நாற்காலி போன்று உணவுகளின் பெயர் கொண்டு விளையாடும் விளையாட்டு. வயது வரம்பு: அனைவரும்.

3.அன்னையை அறிவோம் - அன்னையைப்பற்றி குழந்தைகளும் கணவரும் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்னும் சுவாரசியம் மிக்க விளையாட்டு.  வயது வரம்பு: அனைவரும்.


4. தூய தமிழ் பேச்சு போட்டி.- மூன்று நிமிடங்களில் கொடுக்கப்பட்ட தலைப்பில் எவ்வளவு சரளமாக பிழையின்றி தூய தமிழில் பேசுகிறார்கள் எனும் போட்டி. வயது வரம்பு: அனைவரும்.


5. திருக்குறள் ஒப்பிப்பு போட்டி - குழந்தைகளிடத்தில் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் ஆர்வமும் தாக்கமும் ஏற்படுத்த ஒரு போட்டி. வயது வரம்பு: அனைவரும்.

6. சித்திரப் போட்டி - குழந்தைகளுக்கான பத்து நிமிட சித்திரப்போட்டி. குறிப்பு: தூரிகை அல்லது வண்ணப்பேனா (sketch pens) குழந்தைகள் கொண்டு வர வேண்டும். வயது வரம்பு: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.

7. கழிவுலிருந்து கலை - குழந்தைகளுக்கான, தேவையற்ற பொருட்களிலிருந்து கலை நயமிக்க பொருட்களை பத்து நிமிடங்களில் எவ்வாறு தயாரிக்கலாம் என சிறிய போட்டி. குறிப்பு: வீட்டிலிருந்து பொருட்களை கொண்டு வர வேண்டும். வயது வரம்பு: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.



நன்றியுரை


வாங்க! பழகலாம்!

Thursday 7 April 2016

வை.வா.வி.வ-3ம் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள்...

வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்-NCR-NEW DELHI.  
நமது வாசகர்வட்டத்தின் 3வது வருட ஆண்டுவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியாக வருகிற (சித்திரை தமிழ் மாதம்)ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை   அன்று வைஷாலி செக்டர்-4 இல் இருக்கும் "தஸ் மஞ்சில்" என்று அழைக்கப்படும் 10 அடுக்கு மாடி கட்டிட (வருமானவரி குடியிருப்பு)  பகுதியில் அமைந்த சிவன் கோவில் வளாகத்தில்  காலை  10 மணியிலிருந்து நடைபெறவிருக்கும் வைஷாலி வாசகர் வட்ட நிகழ்ச்சியில் நம்மோடு உத்திரப் பிரதேச அவ்வை தமிழ் சங்கமும் இணைந்து பல்வேறு பரிசுப் போட்டிகள் மற்றும்  கலை நிகழ்சிகளும் நடக்கவிருப்பதால் அனைவரும் அன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நமது வைஷாலி வாசகர்  வட்ட நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். 

வழக்கம்போல நமது வாசகர் வட்ட நிகழ்ச்சியில் :- 
முதலில் எங்க வீட்டு "நூலகம்" பகுதி .... (புது புத்தக வரவு)
தொடர்ந்து ......திடீர் தலைப்பை கொண்ட 
0. திருக்குறள் போட்டி 
1. பேச்சுப்போட்டி 
2. பாட்டுப்போட்டி 
3. கதைப்போட்டி 
4. கவிதைப்போட்டி
5. கட்டுரைப் போட்டி  
6. புகைப்படப் போட்டி 
7. சித்திரப் போட்டி,
8. சிரிப்புப் போட்டி,
9. "சரித்திரம் முக்கியம்" பகுதி....
10. "கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"- பயிற்சி வகுப்பில் இந்தமாதம் ?????   
11. வழக்காடு மன்றம் அல்லது பட்டி மன்றம். அல்லது குழுப் போட்டி.
12. "வை.வா.வி.வ- இனைய பூவிதழ்" - இதழின் இந்த மாத ஆசிரியர்?  பகுதி....... மேலும் பல ....


இப்படிக்கு  வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்-NCR-NEW DELHI. 

100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக.

100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள்  இலவசமாக ஒரே இடத்தில், ஆசை தீர நிதானமாகப் திரும்ப திரும்ப படித்து மகிழ பதிவிறக்கம் செய்ய (டவுன்லோட் செய்ய) கீழே உள்ள இனைய முகவரிக்கு சென்று அங்கு தரப்பட்டுள்ள (டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும்) பதிவிறக்க சொடுக்கியைப் பயன்படுத்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்நேரம்கிடைக்கும்போது தொடர்ந்து படியுங்கள்.