வைஷாலி வாசகர் வட்டம்: வாங்க! பழகலாம்! " கோடை கொண்டாட்டம்" - பொன் மாலைப் பொழுதில் பொழுது போக்கு விளையாட்டுகள்

FREE JOBS - JUST CLICK HEAR

Thursday 21 April 2016

வாங்க! பழகலாம்! " கோடை கொண்டாட்டம்" - பொன் மாலைப் பொழுதில் பொழுது போக்கு விளையாட்டுகள்


கோடை கொண்டாட்டம் !
அவ்வை தமிழ் சங்கம் & வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம் இணைந்து வழங்கும் " கோடை கொண்டாட்டம்" - பொன் மாலைப் பொழுதில் பொழுது போக்கு விளையாட்டுகள்



நாள் : 24.04. 2016
தினம் : ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4 முதல் 8 மணி வரை
இடம்: வைஷாலி சிவன் கோவில், செக்டர் 4 ( தஸ் மஞ்சில் என அழைக்கப்படும் 10 அடுக்கு மாடி கட்டிடம் வருமான வரி குடியிருப்பு அருகில்), வைஷாலி. NCR-New Delhi.



நிகழ்ச்சி நிரல்:-



தமிழ்த் தாய் வாழ்த்து
வரவேற்புரை



நிகழ்சிகள்:-

1. யார் இவர், ஊமை விளையாட்டு - உங்கள் பொது அறிவுக்கு ஒரு சவால். ஒரு பிரபல மனிதரை கண்டுபிடிக்கும் உற்சாகம் மிக்க குழு விளையாட்டு. வயது வரம்பு: அனைவரும்.

2. இசை உணவு (Food blast) - இசை நாற்காலி போன்று உணவுகளின் பெயர் கொண்டு விளையாடும் விளையாட்டு. வயது வரம்பு: அனைவரும்.

3.அன்னையை அறிவோம் - அன்னையைப்பற்றி குழந்தைகளும் கணவரும் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்னும் சுவாரசியம் மிக்க விளையாட்டு.  வயது வரம்பு: அனைவரும்.


4. தூய தமிழ் பேச்சு போட்டி.- மூன்று நிமிடங்களில் கொடுக்கப்பட்ட தலைப்பில் எவ்வளவு சரளமாக பிழையின்றி தூய தமிழில் பேசுகிறார்கள் எனும் போட்டி. வயது வரம்பு: அனைவரும்.


5. திருக்குறள் ஒப்பிப்பு போட்டி - குழந்தைகளிடத்தில் உலகப்பொதுமறையாம் திருக்குறளின் ஆர்வமும் தாக்கமும் ஏற்படுத்த ஒரு போட்டி. வயது வரம்பு: அனைவரும்.

6. சித்திரப் போட்டி - குழந்தைகளுக்கான பத்து நிமிட சித்திரப்போட்டி. குறிப்பு: தூரிகை அல்லது வண்ணப்பேனா (sketch pens) குழந்தைகள் கொண்டு வர வேண்டும். வயது வரம்பு: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.

7. கழிவுலிருந்து கலை - குழந்தைகளுக்கான, தேவையற்ற பொருட்களிலிருந்து கலை நயமிக்க பொருட்களை பத்து நிமிடங்களில் எவ்வாறு தயாரிக்கலாம் என சிறிய போட்டி. குறிப்பு: வீட்டிலிருந்து பொருட்களை கொண்டு வர வேண்டும். வயது வரம்பு: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை.



நன்றியுரை


வாங்க! பழகலாம்!

No comments:

Post a Comment