வைஷாலி வாசகர் வட்டம்: October 2015

FREE JOBS - JUST CLICK HEAR

Sunday 25 October 2015

பறவை நோக்குதல்(Bird Watching)மற்றும் பறவை கணக்கெடுப்பு(Birds Count)இலவச விழிப்புணர்வு பயிற்சி.


இன்று அக்டோபர் மாதம் (25-10-2015) ஞயிறு காலை 6.00 மணி அளவில் தில்லி நொய்டா- அவ்வை தமிழ்ச்சங்கம் மற்றும் NCR-NEW DELHI-வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள் என 15 நபர்கள் குழு, பறவை நோக்குதல் மற்றும் பறவை கணக்கெடுப்பு இலவச விழிப்புணர்வு பயிற்சிக்கு வந்திருந்தனர். 

அவ்வை தமிழ் சங்கத்தின் திரு. ஆர்.கே. வாசன் அவர்கள், திரு. கிருஷ்ணமாச்சாரி மற்றும் திரு ஷங்கர், மருத்துவர் திரு ஆர்.வளவன் அனைவரும் பறவை நோக்குதலின், இலவச விழிப்புணர்வு பயிற்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் முன்கூட்டியே தயார்நிலையில் அமைத்துத் தந்தார்கள்.


வைசாலி திரு.வி.சுப்ரமண்யம், ஆராய்ச்சியாளர்-பறவை நோக்குதல் (Bird Watching & Research), மற்றும் புது தில்லி அதன் சுற்றுப்புற வட்டத்தின் "ஊர்ப்புற பறவைகள் கனேக்கேடுப்பு குழு உறூப்பினர்" அவர்கள், முதலில் பறவை நோக்குதல் பற்றிய விவரங்களை சுருக்கமாக அனைவருக்கும் தெளிவாக புரியுமாறு விளக்கி கூறினார். மேலும் பயிற்சி வனப்பகுதியில் நடப்பதால் அதற்குத் தேவையான  பாதுகாப்பு வழிமுறைகள் பற்றியும் மேலும் பறவை மற்றும்  விலங்கினங்களுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்ப்பட்டுவிடக் கூடாது என அதற்க்குண்டான விதிமுறைகள் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறினார். அவருடன் திரு.ரோநிட் தத்தா (RONIT DUTTA) என்கிற கல்கத்தாவை சேர்ந்த Delhi IIT- B.Tech & Phd மாணவர் சென்ற 9 ஆண்டுகளாக பறவை நோக்குதலில் அனுபவம் பெற்ற மற்றுமொரு உறுப்பினரும் சேர்ந்து பயிற்சிக்கு வந்திருந்த அனைவரையும் வழிநடத்தினார்கள். 




சரியாக 6.25 மணியளவில் அவ்வை தமிழ் சங்கத்தின் திரு ஆர் கே. வாசன் அவர்கள் பறவைகள் சரணாலயத்தின் நுழைவு சீட்டை  பெற்றுத் தர அனைவரும் புதிய உற்சாக பரபரப்போடு புது தில்லியின் (DELHI-'OKHLA' BIRDS SANCTUARY)ஓக்லா-பறவைகள் சரணாலயத்தில் நுழைந்தோம்.


மேகங்களுக்கு நடுவில் இருந்து எட்டிப் பார்ப்பதுபோல இளம் காலைச் சூரியன் கண்சிமிட்டினான். அமைதியாக இருந்த சரணாலயத்தின் தெற்குப்பகுதி நோக்கி நகர்ந்தோம் முதலில் சில ஊசிவால் வாத்துகளும், நீர்க்கோழிகளும் வரவேற்றன, வழி முழுவதும் திரு வி சுப்பிரமணியன் அவர்கள் மெல்லிய குரலில் பறவைகள் பற்றிய பல சுவையான தகவல்களை சொன்னார். 

தொடர்ந்து சில வகை பறவைகளை மிக அருகிலும்,  முக்கியமான பறவைகள் சில வெகு தூரத்தில் இருந்ததை தொலைநோக்கி வழியாக பார்த்து ரசித்தோம். சரியாக காலை 8.30 மணியளவில் 40 வகையான பறவைகளை பார்த்ததாக கூறியபோது ஆச்சரியமாக இருந்தது. எங்கள் குழுவில் இருந்த வைஷாலி திரு.எஸ். கார்த்திக் அவர்களின் மகன் அவினாஷ் "வேகமாக வாருங்கள் 50வது பறவையை பார்த்து அரை சதம் அடிக்கவேண்டும் என அனைவரையும் உற்சாகமடையச் செய்தது அனைவருக்கும் புத்துணர்வு தந்தது.



மேலும் பறவைகள் சரணாலயத்தின் மேற்கு பகுதி நோக்கி சிறிது தொலைவு நடந்தவுடன் தொலைநோக்கி கோபுரம் இருந்தது. முன்பு மரப்பலகையில் இருந்த படிக்கட்டுக்கள் தற்போது இரும்பினால் ஆனா படிகளாக மாற்றப்பட்டிருந்தது. 

படிகளில் ஏறுவதற்கு முன் பெரிய பறவைகளின் குரல்கள் கலவையாக ஒலித்து ஆர்வத்தை தட்டியெழுப்பின. நாரைகள், அரிவாள்மூக்கன்கள், மீன் கொத்திகள் மற்றும்  சுரண்டிவாயன்கள் என சில குரல் எழுப்பும் தன்மை உள்ள பறவைகள் இருப்பதாக திரு வி சுப்ரமண்யம் அவர்கள் விளக்கி கூறினார் . 

வேகமாக படிகளைக் கடந்து கோபுரத்தின் உச்சிக்குச் சென்று அங்கிருந்தபடியே புது தில்லியின் கிழக்குப்பகுதியில் யமுனை நதிக்கரையில் அமைந்த அந்த கோரைப் புற்கள் நிறைந்த வனப்பகுதியின் யமுனை நதிப்படுகையையும் காண கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 

யமுனை நதிக்கரை பகுதிகளில் நிறைய அழுகிய பூ மாலைகள் மற்றும் பாலிதீன் பைகள் என கழிவுகள் நீக்கப்படாமல் அசுத்தமாக சரியாக பராமரிக்கப்படாமல் இருந்ததைப் பார்த்தோம். வெகு தூரத்தில் சில பறவைகள்  வரிசையாக அவைகளின் இறக்கைகளை விரித்தவாறு, நீரில் நனைந்த அவற்றின் இறக்கைகளை காயவைத்துக்கொண்டிருக்கிறது என்கிற விவரம் கேட்டு வியப்பாக இருந்தது.   

வித்தியாசமான தோற்றம் கொண்ட அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், பாம்புத்தாரா சாதாரணமாக அதிக எண்ணிக்கையில் கூடுவதில்லை. இவற்றின் பெயரும் நடத்தைகளும் சுவாரசியமானவை.

சாம்பல் நாரை, (கண்ணை மூடிக்கொண்டிருக்கும் குருட்டுக் கொக்கு), போன்ற கொக்கு  வகைகளையும் சில (சிகப்பு , கருப்பு, வெள்ளை நிற) தேன் சிட்டுக்களையும், பருந்து, கருடன் மற்றும் அபூர்வ வகையான பச்சைநிற (Green Pigeon)  புறா வகையைசார்ந்த பறவைகளை கண்டது வியப்பாக இருந்தது. 
வித்தியாசமான இந்த அறிவிப்பு பலகை எதற்கு என்று கேட்டபோது. சரணாலயத்தை சுற்றிப்பார்த்துவிட்டு வெளியே செல்லுபவர்களிடமிருந்து,  சரணாலயத்தின் நுழைவுசீட்டை பெற்று அதை திரும்பவும் வேறு ஒரு நபருக்கு விற்று பணம் சம்பாதிக்கிறார்கள் என்றும், அதை தவிர்க்கவே  இப்படி ஒரு விளம்பர பலகை வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது .... 



கீழ் கண்ட 64 பறவை வகைகளை ஒரே நரத்தில் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது. 
1 Grey Francolin, Francolinus pondicerianus,
2 Indian Peafowl, Pavo cristatus
3 Lesser Whistling-duck, Dendrocygna javanica
4 Gadwall, Anas strepera
5 Spot-billed Duck, Anas poecilorhyncha
6 Common Teal, Anas crecca
7 Garganey, Anas querquedula
8 Northern Pintail, Anas acuta
9 Northern Shoveler, Anas clypeata
10 Indian Grey Hornbill, Ocyceros birostris
11 Common Hoopoe, Upupa epops,
12 White-throated Kingfisher, Halcyon smyrnensis
13 Green Bee-eater, Merops orientalis
14 Greater Coucal, Centropus sinensis
15 Rose-ringed Parakeet, Psittacula krameri
16 Rock Pigeon, Columba livia
17 Laughing Dove, Streptopelia senegalensis
18 Eurasian Collared Dove, Streptopelia decaocto
19 Yellow-footed Green Pigeon, Treron phoenicoptera
20 White-breasted Waterhen, Amaurornis phoenicurus

21 Purple Swamphen, Porphyrio porphyrio
22 Common Moorhen, Gallinula chloropus
23 Red-wattled Lapwing, Vanellus indicus
24 River Tern, Sterna aurantia
25 Whiskered Tern, Chlidonias hybridus
26 Black Kite, Milvus migrans
27 Western Marsh Harrier, Circus aeruginosus 
28 Shikra, Accipiter badius
29 Little Grebe, Tachybaptus ruficollis
30 Darter, Anhinga melanogaster
31 Little Cormorant, Phalacrocorax niger
32 Grey Heron, Ardea cinerea
33 Purple Heron, Ardea purpurea
34 Cattle Egret, Bubulcus ibis
35 Indian Pond Heron, Ardeola grayii
36 Black Bittern, Dupetor flavicollis
37 Black-headed Ibis, Threskiornis melanocephalus,
38 Rufous Treepie, Dendrocitta vagabunda
39 House Crow, Corvus splendens
40 Black Drongo, Dicrurus macrocercus
41 Oriental Magpie Robin, Copsychus saularis
42 Black Redstart, Phoenicurus ochruros
43 White-tailed Stonechat, Saxicola leucura
44 Common Starling, Sturnus vulgaris
45 Asian Pied Starling, Sturnus contra
46 Common Myna, Acridotheres tristis
47 Bank Myna, Acridotheres ginginianus
48 Barn Swallow, Hirundo rustica, Swallow
49 Red-whiskered Bulbul, Pycnonotus jocosus
50 White-eared Bulbul, Pycnonotus leucotis
51 Grasshopper Warbler Locustella naevia
52 Blyth’s Reed Warbler, Acrocephalus dumetorum
53 Clamorous Reed Warbler, Acrocephalus stentoreus
54 Greenish Warbler, Phylloscopus trochiloides
55 Yellow-bellied Prinia, Prinia flaviventris
56 Ashy Prinia, Prinia socialis
57 Plain Prinia, Prinia inornata
58 Oriental White-eye, Zosterops palpebrosus
59 Common Tailorbird, Orthotomus sutorius
60 Striated Grassbird, Megalurus palustris
61 Striated Babbler, Turdoides earlei
62 Jungle Babbler, Turdoides striatus
63 Purple Sunbird, Nectarinia asiatica
64 House Sparrow, Passer domesticus

இறுதியாக 11மணி அளவில், களைப்புற்ற நாங்கள் சரணாலயத்தின் நுழைவாயிலுக்கு திரும்பினோம் அங்கு அவ்வை தமிழச்சங்கத்தின் திரு. கிருஷ்ணமாச்சாரி அவர்கள், குழுவினர் அனைவருக்கும் உடனடி சக்திதரும் சுவையான (அவரது சொந்த தொழிற்சாலையில் உருவான)  அதி விரைவு உணவினை அனைவருக்கும் தந்தது,... மகிச்சியான ஒரு சுற்றுலா போன்றதொரு பயிற்சி வகுப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று நடந்த இந்த இலவச விழிப்புணர்வு பயிற்சியில்,  பறவை நோக்குதலின் பயன்கள் மற்றும் பறவைகளைப் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சிகள், மற்றும் திட்டங்களில், பறவைகள் கணக்கெடுப்பு சேவைப் பனி எந்த அளவு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைப்பற்றியும் குழுவினர் அனைவருக்கும் எளிமையாக புரியுமாறு திரு வி சுப்ரமண்யம் அவர்கள் விளக்கமாக கூறியது மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்தது. வருகிற பிப்ரவர் மாத ஊர்ப்புறப் பறவைகள் கனேக்கேடுப்பில் (கிரேட் பேக்யார்டு பேர்டு கவுன்ட்) இன்று பயிற்சி பெற்ற குழுவினரின் பங்கு நிச்சயம் இருக்கும் என்று அனைவரும் உறுதியளித்தனர். 

நொய்டா அவ்வை தமிழ் சங்கத்திற்கும், வைஷாலி வாசகர் வட்டத்திற்கும் பயிற்சியில் பங்குகொண்ட குழுவினர் அனைவரும் நன்றி தெரிவித்து பயிற்சி நிறைவுற்றது. 

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள். 

Saturday 24 October 2015

வாசகர் வட்டத்தின் "இந்த மாத இனிய இனைய "தமிழ் பூக்கள்" பகுதியில்

NCR-New Delhi- வைஷாலி வாசகர் வட்டத்தின் "இந்த மாத இனிய இனைய "தமிழ் பூக்கள்" பகுதியில் (This Month Sweet Tamil, Web Site/Page & Blogs)   

இந்த மாத தொகுப்பாசிரியர் (This month Editor of this page):-செல்வி எ.கே.பவித்ரா (Ms. A.K.Pavithra Student (BBA.LLB-2nd Year-Mewar Univarsity).

(1). பரிந்துரைக்கப்பட்ட தமிழ் இணைய பக்கங்கள்  (Recommended Web site / blogs for this month):- 

1. http://cybersimman.com/ "இணைய உலகிற்கான உங்கள் சாளரம்":- இணையம் பற்றிய பல விவரங்களை தமிழில் தெரிந்துகொள்ள ஒரு இணையத்தளம்.

2. http://www.valaitamil.com/ வலைத்தமிழ்.காம் - தமிழ் தகவல் களஞ்சியம், செய்திகள், இலக்கியம், சமயம், ஆன்மிகம், சிறுவர் பகுதி, சமையல், உடல்நலம் என பலவித விவரங்களையும் தமிழில் தெரிந்துகொள்ள ஒரு வலைத்தளம்.

3. http://vaani.neechalkaran.com/ "வாணி" தமிழ் எழுத்துப்பிழை திருத்தி, தமிழில் எழுதும்போது வரும் எழுத்துப்பிழைகளை திருத்தும் தமிழ் மென்பொருள் இணையத்தளம்.(தமிழ் வழியில் பாடம் கற்காத நம்மைப்போன்றவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள பக்கம்)

4. http://tamilcube.com/news/tamil/ தமிழில் வெளிவரும் மின்னிதழ்களை அறிமுகம்:- நாளிதழ், வார இதழ், மாத இதழ் அனைத்தையும் ஒரே இனைய பக்கத்தில்.

5. http://www.w3newspapers.com/india/tamil/ (தமிழ் செய்தித்தாள்கள்) சர்வதேச அளவிலான அனைத்து தமிழ் செய்தித்தாள்களும் ஒரே இடத்தில்

6. http://www.geotamil.com/pathivukalnew/ 'கனடாவின் தமிழ் பக்கங்கள்: இணைய இதழ், வலைப்பூ, மின்னூல் மற்றும் சமூக வலைத்தளம் பற்றியதொரு பார்வை'

(II) .நாம் வசிக்கும் நமது NCR- New Delhi புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட எல்லைப்பகுதியின் இனைய "பூ" பக்க, வலைப்பதிவுகளில் இந்தமாத பிரபலமான பதிவுகள் பற்றிய தொகுப்புப் பகுதி (My Readers Circle NCR- New Delhi Web Page/Blogs for this month) :- (புது தில்லியும் அதன் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும்  மாநிலங்களில் வாழும் தமிழ் வலைப்பதிவர்களின் "இனைய "பூ" பதிவுகள்):- 

1. http://venkatnagaraj.blogspot.in/ Mr. Venkat Nagaraj,
நமது புதுதில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட மாநிலப் பகுதியின் இனைய தமிழ் "பூ" பக்கங்கள் வரிசையில், திரு.வெங்கட் நாகராஜ் அவர்களின் இனைய பூக்களில் இவரின் "பாப்ரி- கி.ரா"  சித்திரத் தலைப்பில், பழம் பெரும் எழுத்தாளர் கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (பிறப்பு: 1922) ... இந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் (நமது தாத்தா பாட்டி காலத்தில்) எழுதிய கலைமகள் 1951-ஆம் வருட தீபாவளி மலரில் வெளியான அருமையான "யானைக்" கதையை பகிர்ந்திருக்கிறார்...
 "யானைக் கதை" மிகவும் அருமை, திரைப்படம் பார்த்ததுபோல இருந்தது ... ... நாம் வட மொழியில் "பாப்ரி" என்று கூறுவது "ஆச்சரியம் அல்லது பிரும்மாண்டம்" என்பதாகப் பொருள்.... எழுத்தாளர் கி. ரா. அவர்கள் என்ன நினைத்து இந்த  தலைப்பைத் தந்தார் என்று தெரியவில்லை... திரு.வெங்கட் நாகராஜ் அவரின் அனைத்துப் பதிவுகளும் அப்படிப்பட்ட வியப்பைத் தரும் அருமையான பதிவுகள்......"உத்தரவாதமான சிறந்த இனைய "பூ" பக்கங்கள் மற்றும் பதிவுகளின்" வரிசையில் நமது NCR-New Delhi வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு இவரின் இனைய பூ பக்கத்தை முன்மொழிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.  

2. http://mathinanth.blogspot.in/  Mr.Sethuraman Anandakrishnan  (Anbe Aandavan) சென்னையைச்  சேர்ந்த திரு சேதுராமன் ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் "அன்பே ஆண்டவன்" என்கிற இனைய "பூ" பக்கம்.... தமிழராக இருந்தும் வடநாட்டில்/வெளிநாட்டில் படிக்கும் தமிழ்  மாணவர்கள் தமிழை வேகமாக படிக்க முடியாத நமது வாசகர் வட்ட இளைய மாணவ உறுப்பினர்களுக்கு இவரின் இனைய "பூ" பக்கம் எளிமையாக இருப்பதற்கு காரணம்  வலைப்பதிவுகளில் இவர் அதிகம் ஹிந்தி மற்றும் சமஸ்கிரத மொழிகள் பயன்படுத்துவது.
அவரின் அனைத்துப் பதிவுகளும் பல தமிழ் இலக்கிய, ஆன்மீக விவரங்களை மிக எளிய வழியில் அழகுபட அமைத்திருப்பது நமக்கு வியப்பைத் தரும் அருமையான பதிவுகள்......"உத்தரவாதமான சிறந்த இனைய பதிவுகள்" வரிசையில் நமது (புது தில்லி வட்ட)  வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு இவரின் இனைய "பூ" பக்கத்தை முன்மொழிவதில் மகிழ்ச்சியடைகிறேன். 

(III). இந்த மாத எனது பார்வையில் சர்வதேச தமிழ் வலைப்பதிவுகளில் பிரபலமான பதிவுகள் பற்றிய தொகுப்புப் பகுதி :-

1. http://pureaanmeekam.blogspot.in/"ஆன்மீகம்"  என்னும் ஆன்மீகத் தவவல்கள் நிறைந்த  தமிழ், ஆங்கிலம்,சமஸ்கிரிதம் போன்ற மொழிகளில் "கீதையின்" சாரங்களை எடுத்துரைக்கும் ஒரு வலைப்பக்கம் . This Blog is devoted to ORTHODOX, VEDIC CLUTURE, TRADITIONS AND PHILOSOPHY OF HINDUISM. by Mr. Sury Siva.

2.  http://honeylaksh.blogspot.in/ திருமதி. தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள், சிறந்த தமிழ் கவிஞ்சர், எழுத்தாளர். அவர்களின் இந்த இனைய "பூ" பக்கம் சமுதாய சிந்தனையின் கோட்டை என்று சொல்லலாம்... அவரின் "நவராத்திரி கோலங்கள்" என்னை மிகவும் கவர்ந்தது. நமது NCR-New Delhi வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு இவரின் இனைய பூ பக்கத்தை முன்மொழிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.  

3. http://saibhajans.blogspot.in/ மதுரையைச் சேர்ந்த சாயிதாசன் திரு. விஸ்வேஷ் பாபு அவர்களின் பகவான் ஸ்ரீ சத்யா சாய் பாபாவை போற்றும் "சாய்ராம்" பக்தி பஜனை பாடல்களை தொகுத்து பதிவு செய்திருக்கும் பக்கம் இது.

(IV). இணையம் மூலம் புகழ்பெற்று புதிய பாதை கண்டவர்களை "இனைய வழிகாட்டியாக" அடையாளம் காட்டும் தொகுப்புப் பகுதி :-(இணையம் ஏற்படுத்தி தந்த வாய்ப்புகளையும் அது திறந்து விட்ட புதிய கதவுகளையும் பயன்படுத்திக்கொண்டு தங்களை வெளிப்படுத்திக்கொண்டு முன்னுக்கு வந்த சாமான்யர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்).:-
1. கல்வி கடன் பெற வழிகாட்டும் இணையதளம்:-
கல்விகடன் தொடர்பான தகவல்களை பெறவும், கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கவும் உதவும் இணையதளத்தை மத்திய அரசு துவங்கியுள்ளது.மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் வழிகாட்டியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வித்யாலக்‌ஷ்மி (https://www.vidyalakshmi.co.in) எனும் பெயரிலான இந்த இணையதளம் சுதந்திர தினத்தன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை NSDL-என்.எஸ்.டி.எல். இ-கவர்னன்ஸ் அமைப்பு நிறுவி பராமரிக்க உள்ளது.மாணவர்களின் கல்வி கடன் தேவை தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் அளிக்கும் நோக்கத்துடன் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்படிப்பிற்காக கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் இந்த தளத்தில் பதிவு செய்து கொண்டு விண்ணப்பிக்கலாம். ஒரே விண்ணப்பம் மூலம் பல வங்கிகளுக்கு விண்ணபிக்க முடியும். மாண்வர்கள் கல்வி கடன் விண்ணபங்களையும் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

13 வங்கிகள் தங்களது 22 கல்வி கடன் திட்டங்களை இந்த தளத்தில் இடம்பெற வைத்துள்ளன. 5 முக்கிய வங்கிகள் தங்கள் அமைப்பை இந்த தளத்துடன் இணைத்துள்ளன.
இதே போல மத்திய அரசு வழங்கும் கல்வி ஊக்கத்தொகை தொடர்பான தகவல்களையும் பெற முடியும்.
கல்வி கடன் தொடர்பான தகவல்களை பெறவும், விண்ணப்பிக்கவும் வழி செய்யும் இந்த வகையான இணையதளம் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் கடனுக்கான விண்ணப்பங்களின் நிலை குறித்த தகவலையும் இதன் மூலம் தெரிவிக்கும் வசதி உள்ளது. மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களின் நிலை மற்றும் சந்தேகங்கள் குறித்து இ-மெயில் மூலம் கோரிக்கை அனுப்பி விவரங்கள் பெறலாம்.
இணையதள முகவரி: https://www.vidyalakshmi.co.in

2. புதிய இணையதளங்களை அடையாளம் காட்டும் புதுமையான தளம்:-
புதிய பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்வது எப்போதுமே இனிமையான அனுபவம் தான்.இதை கொஞ்சம் சுவாரஸ்யமானதாகவும் ஆக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ இணையதளம்.
புதிய இணையதள அறிமுக தளங்கள் பல காலமாக இருக்கின்றன என்றாலும், இதை முற்றிலும் புதுமையாக செய்கிறது இந்த தளம். வழக்கமாக பார்க்க கூடியயது போல, இணையதளங்களை பட்டியல் போடாமல், அவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தாமல் ஒவ்வொரு கிளிக்கிலும் ஒரு பயனுள்ள புதிய இணையதளத்தை தோன்றச்செய்கிறது இந்த தளம்.

அதாவது, இணையதளங்களை எந்தவித வரையறைக்கும் உட்படுத்தாமல்,ஒவ்வொரு தளமாக எட்டிப்பார்க்க செய்கிறது. இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் இதன் முகப்பு பக்கத்தில் உள்ள, என்னை பயனுள்ள இணையதளத்திற்கு அழைத்துச்செல்லவும் எனும் கட்டளைக்கு கீழ் இருக்கும் பட்டனை கிளிக் செய்வது தான் – கிளிக் செய்ததுமே தானாக ஒரு டேப் ஓபனாகி அதில் புதிய இணையதளம் தோன்றுகிறது.
இப்படி ஒவ்வொரு முறை கிளிக் செய்யும் போது புதிய இணையதளத்துடன் புதிய டேப் ஓபனாகும். அடுத்த வரும் தளம் என்னவாக இருக்கும் , எந்த வகையை சேர்ந்ததாக இருக்கும் என்று தெரியாது;ஆனால் பயனுள்ளதாக இருக்கும்.

புதிய தளங்களை அறிமுகம் செய்து கொள்வது என்பதே இணையத்தில் மூழ்கி முத்தெடுப்பது போலதானே. இந்த கண்டறிதலை கொஞ்சம் புதுமையான முறையில் சாத்தியமாக்குகிறது ’ரேண்டம் யூஸ்புல் வெப்சைட்’ .
பயன்படுத்திப்பாருங்கள்; பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
புதிய தளங்களை இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்த தளத்தில் இடம் பெறக்கூடியது என நீங்கள் தரும் இணையதளங்களையும் சமர்பிக்கலாம்.

டான் வாக்கர் மற்றும் மாட் கார்பெண்டர் ஆகிய இரு மென்பொருளாளர்கள் உருவாக்கியுள்ள இந்த தளம் தான் இப்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரை கவர்ந்துள்ளது.
இணையதள முகவரி: http://randomusefulwebsites.com/

(V). இந்த மாத "முகநூல் சுவற்றின் சித்திரங்கள்" தொகுப்புப் பகுதி :-
1. https://www.facebook.com/AVVAITAMILSANGAM (அவ்வை தமிழ் சங்கம் முகநூல் பக்கம்:- உத்திரப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களின் நலனுக்காக, எல்லோரையும் இணைக்கும் பாலமாக செயல்பட விரும்பும் ஒரு அமைப்புதான் அவ்வை தமிழ் சங்கம். பல வேறுபட்ட நிகழ்ச்சிகளின் மூலம் எல்லோரையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்து ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளவும், நம்மிடம் இருக்கும் திறமைகளை மற்றவர்க்கு வெளிக்காட்டும் ஒரு மேடையாகவும் விளங்குகிறது நமது "அவ்வை தமிழ் சங்கம்").

2. https://www.facebook.com/groups/945285868864703/ (தமிழ் திரையில் இயல் இசை நாடகம்:- நூற்றாண்டை கொண்டாடும் தமிழ் திரையில் இயல் இசை நாடகம் பற்றிய பல விவரங்களைக் இங்கு காணலாம்... திருமதி.கோதை தனபாலன் அவர்கள் இந்த முகநூல் பக்கத்தை நிறுவி, உபயோகமான பல விவரங்களால் சிறப்பாக இந்த முகநூளின் சுவற்றை அலங்கரித்து வருகிறார்மேலும் அவரது கவிதைகளால் இந்த http://natchiark.blogspot.in/ வலைப்பக்கத்தையும் அலங்கரித்திருக்கிறார்...(விருப்பமுடையவர்கள் இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து பயன்பெறலாம்.)

3. https://www.facebook.com/vaanoli.mandram (முகநூளில் தமிழ் வானொலி மன்றம்:- பல்வேறு சர்வதேச தமிழ் வானொலி நிலையம் மற்றும் வானொலி நிகழ்சிகள் பற்றிய விவரங்களைக் இங்கு காணலாம்).

4. https://www.facebook.com/Programmedirectors (நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை) நீங்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளராக எந்த நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக நடத்த இந்த முகநூல் பக்கம் உங்களுக்கு பல அனுபவங்களை கற்றுத்தரும் முகநூல் பட்டறை, மேலும் இது நமது வாசகர் வட்டத்தின் நிகழ்ச்சி தயாரிப்பு பற்றிய பயிற்சிப் பட்டறை பக்கம். 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முகலூல் பக்கத்தில் பல நிகழ்ச்சி தயாரிப்பு சார்ந்த விவரங்கள் மற்றும் சிறப்பான பல நிகழ்சிகள் பற்றிய தொகுப்புக்களும் இடம்பெற்றுள்ளது.

5. https://www.facebook.com/groups/945285868864703/ வாட்ஸ்-அப் கவிதைகள்:- முகநூளில் கொலுசு மாத மின்னிதழின், கைத்தொலைப்பேசியின் வாட்ஸ்-அப் அளவிலான குட்டிக் கவிதைகளை வாசிக்கவும், இந்த முகநூல் சுவற்றில் உங்களின் கவிதை இடம்பெறவும் இந்த "வாட்ஸ்-அப் கவிதைகள்" பகுதியில் உங்களை இணைத்துக்கொள்ளலாம்.

இந்தப் பகுதி உங்களுக்கு எந்த அளவில் பயனுள்ளதாக அமைந்தது என்பதை குறிப்பிடுங்கள். இந்த பகுதி மேலும் சிறப்படைய, உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள் ... நன்றிகளுடன் இந்த மாத இனைய பக்க தொகுப்பாசிரியர்-A.K.Pavithra. 

Wednesday 14 October 2015

பறவை நோக்குதலில் (Bird Watching) உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? இதோ உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு.......

பறவை நோக்குதலில் (Bird Watching) உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?  இதோ உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு....... 

வருகிற 25 அக்டோபர்(25-10-2015) ஞயிறு அன்று "உத்திரப்பிரதேச தமிழர்களின்- ஔவை தமிழ்ச்சங்கமும்", NCR-NEW DELHI-வைஷாலி வாசகர் வட்டமும் இணைந்து,  வைசாலி திரு.வி.சுப்ரமண்யம், ஆராய்ச்சியாளர்-பறவை நோக்குதல் (Bird Watching & Research), மற்றும் புது தில்லி அதன் சுற்றுப்புற வட்டத்தின் "ஊர்ப்புற பறவைகள் கனேக்கேடுப்பு குழு உறூப்பினர்"அவர்களின் தலைமை வழிகாட்டுதலின்படி, பறவைகள் நோக்குதல்  மற்றும் கணக்கெடுப்பது பற்றிய இலவச விழிப்புணர்வு பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்களில், தேர்ந்தெடுக்கப்படும் 25 நபர் கொண்ட ஒரு குழு மட்டும் 25-10-2015 அன்று புதுதில்லியின் "தில்லி-ஒக்லா பறவைகள் சரணாலயத்தில்- DELHI-'OKHLA' BIRDS SANCTUARY" விடியற்காலை 6 மணியிலிருந்து மதியம் -11 மணி வரை சிறப்பு பயிற்சியளிக்க இருப்பதால், தங்களது விருப்பத்தை கீழ் கண்ட தொலைப்பேசியின் வழியிலோ அல்லது மின் அஞ்சலிலோ 21-10-2015 முன்பாக தொடர்புகொண்டு தெரியப்படுத்தவேண்டும்.

பயிற்சி விதிமுறைகள்:-
1. பறவை நோக்குதலில் "அமைதி காப்பது" மற்றும் "பாதுகாப்பு விதிமுறைகள்" மற்றும் "மிக அதிக தூரம் கரடு முரடான பாதையில் நடக்கவேண்டியிருப்பதால்" பல பாதுகாப்பு அம்சங்களை அவசியம் தெரிந்துகொண்டு அவற்றை பின்பற்றவேண்டும் என்பதால், முதல் 15நிமிடம் பாதுகாப்பு விதிமுறை பற்றிய பயிற்சியளிக்கப்படும்.
    
2. பயிற்சியில் கலந்துகொள்பவர்கள், உடல் முழுதும் பாதுகாப்பாக மூடியிருக்கும் வகையில், முழு கை சட்டையையும், முழு கால் மூடிய நிலையில் அணியும் உடையை அணியவேண்டும்.

3. அணியும் உடைகள் மெல்லிய வெளிர் நிறத்திலான வண்ண உடைகளை அணியவேண்டும், (பறவைகள் பயந்து விரட்டும் அடர்ந்த நிற உடைகளை தவிர்க்கவேண்டும். மேலும்  வெண்மை நிற உடையையும் தவிர்க்கவும்).

4. கரடு முரடான வனப்பகுதி என்பதால் கால்களில், பாதம் முழுதும் மூடும் வகையிலான காலணி அணியவேண்டும் (அதாவது பயிற்சி காலணி அல்லது விளையாட்டுக் காலணி (Can wash-sports-shoes) அணியவேண்டும்)    

4. மூன்று  மணி நேரம் வனப்பகுதியில் சுற்றுவதர்க்குத் தேவையான தண்ணீர் மற்றும் எளிய சக்திதரும் உணவுப்பொருள்களை கைப்பையில் உடன் எடுத்துவரவேண்டும். 

5. விருப்பமுள்ளவர்கள் தொலைநோக்கி மற்றும் புகைப்பட கருவிகளை எடுத்துவரலாம்.

6. சொந்த வாகனங்களில் வருபவர்கள், பறவைகள் சரணாலயத்தின் நுழைவாயிலில் வாகன நுழைவு சீட்டு மற்றும்  நிறுத்துமிட கட்டணம் செலுத்தி, அதற்க்கான சீட்டை பெற்றுக்கொள்வது அவசியம்.      

7. சரணாலயத்தின் நுழைவாயிலுக்கு 6.15am நிமிடங்களுக்குப் பிறகு வருபவர்கள் பயிற்சியில் இடம்பெரமுடியாது என்பதை கருத்தில் கொள்ளவும்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி:- "கிழக்கு தில்லியின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும்":- 

1. வைஷாலி மற்றும் வசுந்தரா பகுதியில் வசிப்பவர்கள் :- திரு.கோபால கிருஷ்ணன்(Mr. Gopalkrishnan) +91-9717236514. மற்றும் திரு வி. சுப்பிரமணியம்(Mr. V.Subramanyam) +91-9868216038.  என்கிற தொலைபேசி என்னில் தொடர்புகொள்ளவேண்டும்.  

2. இந்திராபுரம் பகுதியில் வசிப்பவர்கள்:- திரு.சோலையப்பன் (Mr. Solayappan) +91-9711991645.  அல்லது திரு ஐயப்பன்(Mr. Ayyappan)+91-9818126861 என்கிற தொலைபேசி என்னில் தொடர்புகொள்ளவேண்டும்.

3. நொய்டா(N.O.I.D.A) பகுதியில் வசிப்பவர்கள்:- ஔவை தமிழ் சங்கம்:- மருத்துவர் ஆர். வளவன்(Dr.R.Valavan) +91-9312309186. அல்லது திரு.சங்கரன் (Mr.Shankaran) +91-9899100243.என்கிற தொலைபேசி என்னில் தொடர்புகொள்ளவேண்டும்.

4.தொடர்புகொள்ளவேண்டிய மின் அஞ்சல் /E_mail:- "VAISHALIREADERSCIRCLE@GMAIL.COM" (or) "AVVAITAMILSANGAM@GMAIL.COM"

பறவை நோக்குதலின் பயன்கள்:- 
பறவைகளைப் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சிகள், மற்றும் திட்டங்களில், பறவைகள் கணக்கெடுப்பு சேவைப் பனி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
சர்வதேச அளவிலான இந்தக் கணக்கெடுப்புக்கு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (கிரேட் பேக்யார்டு பேர்டு கவுன்ட்) என்று பெயர். ஃபிப்ரவரி 14 முதல் 17 வரை (வெள்ளி முதல் திங்கள் வரை) இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபடுவதற்கு நீங்கள் பெரிதாக மெனக்கெட வேண்டியது இல்லை. பறவை நோக்குதலில் ஆர்வம் இருந்தால் போதும். உங்கள் வீட்டு மாடி, புழக்கடை, முன்புறம் உள்ள தோட்டம், வீட்டுக்கு அருகில் உள்ள பூங்கா, ஏரி, நீர்நிலை போன்ற இயற்கை செழிக்கும் ஏதாவது ஒரு இடம் போதும்.

குறைந்தபட்சம் 15 நிமிடங்கள், அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பறவை களைக் கண்காணித்து, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். நீங்கள் பார்த்த பறவை வகைகள், அவற்றின் எண்ணிக்கை போன்ற வற்றைக் குறித்துக்கொள்வது அவசியம். எல்லாப் பறவைகளையும் அடையாளம் காண முடியாவிட்டாலும் பரவாயில்லை, உங்களால் கண்டுபிடிக்க முடிந்த பறவை வகைகளைப் பதிவு செய்தால் போதும்.

இந்தக் கணக்கெடுப்பு பல்வேறு முக்கியக் கேள்விகளுக்கு விடையளிக்க உதவும். இந்தியாவில் உள்ள பறவைகளின் நிலைமையை இந்தக் கணக்கெடுப்பு மூலம் புரிந்துகொள்ளலாம். வாழிட மாறுதல்களால் பறவைகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன, தட்பவெப்பநிலை மாற்றங்கள், பறவைகளின் எண்ணிக்கையும் பரவலும் மாறுகின்றனவா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

இந்தத் திட்டம் மூலம் விஞ்ஞானிகளுக்கான ஆராய்ச்சித் தகவல்களை ஆர்வலர்களும் திரட்டித் தர முடிகிறது. இந்தக் கணக்கெடுப்பு உலகின் மிகப் பெரிய மக்கள் அறிவியல் திட்டங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இந்தக் கணக்கெடுப்பில் 111 நாடுகள் பங்கேற்றன. 3.5 கோடி பறவை நோக்கர்கள் 4,000 பறவை வகைகளைப் பதிவு செய்திருந்தார்கள். இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட பறவைகள் பற்றி 400க்கும் மேற்பட்ட பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதில் 89 பட்டியல்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை. அது நாட்டிலேயே இரண்டாவது அதிகப் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் பறவை பற்றிய பதிவுகளை www.BirdCount.org இல் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு இந்த இணையப் பக்கத்தைப்  பாருங்கள்: gbbc.birdcount.org.

நன்றிகளுடன் “(வை.வா.வி.வ)-வாசகர் வட்ட உறுப்பினர்கள்”

--^--சுபம்--^--

Tuesday 13 October 2015

இந்த மாத (அக்டோபர்) நமது "வை.வா.வி.வ-NCR-Delhi"

மாதம் ஒரு வாசகர்வட்ட கூட்டத்தின்:- இந்த மாத (அக்டோபர்நமது "வை.வா.வி.-NCR-Delhi"