வைஷாலி வாசகர் வட்டம்: மாதம் ஒரு வாசகர்வட்ட கூட்டத்தின் இந்த மாத (அக்டோபர்) நமது "வை.வா.வி.வ-NCR-Delhi" வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்ட, நிகழ்ச்சி

FREE JOBS - JUST CLICK HEAR

Friday 9 October 2015

மாதம் ஒரு வாசகர்வட்ட கூட்டத்தின் இந்த மாத (அக்டோபர்) நமது "வை.வா.வி.வ-NCR-Delhi" வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்ட, நிகழ்ச்சி

!! கற்க கசடற….!!                               !! வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.

மாதம் ஒரு வாசகர்வட்ட கூட்டத்தின்:- இந்த மாத (அக்டோபர்) நமது "வை.வா.வி.-NCR-Delhi" என்கிற வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்ட, நிகழ்ச்சியில் வழக்கம்போல :- 

இந்த மாத நிகழ்ச்சிக்கு  தலைமை ஏற்று சிறப்புரை:- வைஷாலி திரு வி. சுப்ரமணியம் அவர்கள் தலைமை ஏற்று (Bird Watching)  பறவை நோக்குதலின் சிறப்பு பற்றிய தமது அனுபவத்தை, நம்மோடு பகிர்ந்துகொண்டு  உரையாற்ற இருக்கிறார்.

இந்த மாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்:- செல்வி  .கே.பவித்ரா (BBA,LLB). 

இந்த மாத நிகழ்ச்சிக்கான இடம்:-  வைஷாலி என் :-160/G2 செக்டர்-4, (வைஷாலி மெட்ரோ ரயில் நிலையம் அருகில்) , காஜியாபாத், NCR-NEW DELHI.  

இந்த மாத நிகழ்ச்சிக்கான நேரம்/ திகதி:-11-10-2015.(Sunday) ஞாயிறு மதியம் 15.00 to 18.00 Hrs.

நிகழ்சிகள்:-
1. வீட்டுக்கு ஒரு நூலகம்:- (எங்கள் வீட்டு நூலகத்தின் புதிய புத்தக வரவு),-"வை.வா.வி." உறுப்பினர்களின் "எங்க வீட்டுக்கு புத்தகம் படிக்க  வாருங்கள்" என்று அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி. )
2.  எனக்குப் பிடித்த "புத்தகம், கதாசிரியர் மற்றும் கதைகள்";-.
3.  திடீர் தலைப்புக்:- கவிதை அல்லது பேச்சுப்போட்டி:-
4. "பாட்டுப்பாடவா" மற்றும் நகைச்சுவை "சிரி-சிந்தி-செயல்படு":-    
5. "கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்" நிகழ்ச்சியில் இந்த மாதம்..(Computer Hardware Assembling Course) சுய வருமானம் தரும் கணினி ஹார்டுவேர் தொழில் பயிற்சி:- எந்தப் பிரிவுப் பாடமென்றாலும் கணினிப் பயன்பாடு தவிர்க்க முடியாதது என்பதால் அறிவியல், பொறியியல் மட்டுமன்றி அனைத்துத் துறையினரும் கணினி ஹார்டுவேரில் அடிப்படைப் பயிற்சி பெறலாம். படிப்பு மற்றும் பணி சார்ந்து பயன்படாவிட்டாலும், சிறு பழுதுகளை நாமே சரிபார்க்கவும் இப்பயிற்சி உதவும்.
6. "சரித்திரம் முக்கியம்" பகுதியில்:- பாஸ்டன் தேநீர் விருந்து பற்றிய சுவையான செய்தியை "குடிக்கலாம்" வாங்க... பகுதியை வழங்குபவர்  ஸ்ரீ சத்யா சாயி பாலவிகாஸ் மாணவர் திரு..கே.சபரிஷ் (DCE&B.Tech-Civil).
7.  தேநீர் இடைவேளை:- (விளம்பர இடைவேளைக்குப் பிறகு நிகழ்ச்சி தொடரும்
8. எனக்குப் பிடித்த விளம்பரம் பகுதியில்:- "MIND ON FIRE"  "விழிப்புடன் இருங்கள்என தற்கால விளம்பரங்கள் குறித்து கலந்துரையாடல்
9.  கைவண்ணம் பகுதியில்.(கண்காட்சி-ஓவியம், புகைப்படம், குறும்படம், கைவினைப்பொருட்கள்)
10.  அடுத்த மாத நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பு, இடம், திகதி:- போன்ற விவரங்களை முடிவு செய்து, நிகழ்ச்சிக்கு நன்றி பாராட்டி,முடிவுரை.

*****அனுமதி இலவசம், அனைவரும் வரலாம்.*****

மேலும் பல விவரங்கள் பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கீழ் கண்ட நமது "வை.வா.வி.- NCR-Delhi" வாசகர் வட்ட முகநூல் பக்கத்துக்கு சென்று பார்க்கலாம்
அல்லது புது தில்லி மற்றும் அதன் எல்லைப்பகுதியில் வாழும் தமிழர்கள் தங்களது விருப்பம் குறித்த விண்ணப்பம் அனுப்ப கீழே கொடுத்துள்ள மின் அஞ்சலை பயன்படுத்தி அவர்களது ஆர்வத்தை தெரியப்படுத்தலாம்.

இப்படிக்கு,
“(வை.வா.வி.வ)-வாசகர் வட்ட உறுப்பினர்கள்”

--^--சுபம்--^--

No comments:

Post a Comment