வைஷாலி வாசகர் வட்டம்: May 2016

FREE JOBS - JUST CLICK HEAR

Saturday 28 May 2016

இலவச தமிழ் பயிற்சியில் சேர உற்சாகப்படுத்துங்கள்...

தமிழகம் அல்லாத பிற மொழி பேசும்வெளி மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் வாழும் புதிய இளைய தலைமுறையினருக்காக தமிழ் வகுப்புக்கள்....

பேராசிரியர் டாக்டர் மா.நன்னன் அவர்களின் தமிழ் ஆராய்ச்சி புத்தக குறிப்புகளின் புதிய எளிய முறையில் தமிழ் எழுத படிக்க கற்றுக்கொள்ளுங்கள். 


புதிய, எளிய வரி எழுத்துக்களைக் கொண்டு தொடங்கும் வகையில், எளிய முறையில் முதல் எழுத்து "ட" அடுத்து "ப" என வல்லினத்தில் ஆரம்பித்து, தொடர்ந்து "ய" என்கிற இடையினம் மற்றும் "ம" என்கிற மெல்லின எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட புதிய முறையில் எளிமையாக தமிழ் கற்றுக்கொள்ளும் வகுப்புகள் 

(அ-என்கிற உயிர் எழுத்திலிருந்து ஆரம்பித்து, கையைப்பிடித்து எழுதக் கற்றுக் கொடுக்க வேண்டி இருப்பதால், தமிழ் கற்ப்பது மிகவும் கடினம் என்று முதல் வகுப்பிலேயே ஓடி விடுகிறார்கள்). 

ஆகவே புதிய இளைய தலைமுறையினருக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்பதைவிட, எதோ ஒரு முறையில் தமிழை எழுத படிக்க கற்றுக்கொடுப்பது சிறப்பு.) எனவே ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று காலை 10.00 மணி அளவில் தொடங்கும் நமது NCR-NEW DELHI- வைஷாலி வாசகர் வட்ட தமிழ் வகுப்புகளில் கலந்துகொள்ளுங்கள். தமிழ் எழுத படிக்கத் தெரியாத, கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களை இந்த இலவச தமிழ் பயிற்சியில் சேர உற்சாகப்படுத்துங்கள்... 

நன்றி, வாழ்க தமிழ்.

Friday 27 May 2016

ஒவ்வொரு மாதமும் வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளை அள்ளுங்கள்

ஒவ்வொரு மாதமும் வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் கலந்துகொண்டு ஏராளமான பரிசுகளை அள்ளுங்கள்:-
NCR-NEW DELHI என்று குறிப்பிடும் நமது தேசிய தலைநகரான புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட எல்லைப்பகுதியில் அமைந்த ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேச மாநில எல்லைப்பகுதியை ஒட்டிய இடங்களில்  வசிக்கும் தமிழர்களும், கிழக்கு தில்லியின்  "வைஷாலி" டெல்லி மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்த செக்டர்-4 மையப் பூங்காவில் (Central Park) நடைபெறும் நமது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பு  நிகழ்ச்சியில் பங்குபெறலாம். 
1. நமது வாசகர் வட்ட சந்திப்பின் அனைத்துப் போட்டிகளிலும் பங்குபெற்று பரிசினை வெல்லுங்கள்.
2. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு இதழின்  6-வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள்.
3. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு போட்டிக் கேள்வியின் சரியான விடை கூறி பரிசினை வெல்லுங்கள்.
4. நமது வாசகர் வட்ட வலைப்பதிவு கதையின் தொடர்ச்சியான "மீதிக் கதையைக்" கூறி பரிசினை வெல்லுங்கள்.
5. எனக்குப் பிடித்த எழுத்தாளர் பகுதியில், கதை / கவிதைப்  புத்தக விமர்சனங்களைக் கூறி பதிப்பாளர்களின் பணமுடிப்பு பரிசைப் பெறுங்கள்.
6. ஒவ்வொரு மாதமும் 3-வது  ஞயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில் கலந்துகொண்டு குலுக்கல் முறையில் திடீர் அதிர்ஷ்ட பரிசுகளை வெல்லுங்கள்.  மேலும் பல பரிசுகளும் உண்டு 

பின் குறிப்பு :- அனைத்து பரிசுகளும் வாசகர் வட்ட சந்திப்பில் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுக்கொள்ளவேண்டும். 
முக்கியமாக வரும் 28வது (19-06-2016-அன்றைய) நமது வாசகர் வட்ட சந்திப்பிலிருந்து, வீட்டிலிருந்தபடியே இணையவழி கணினியில் சம்பாதிக்கும் இலவச பயிற்சி மற்றும் அதற்க்கான முழு விவரங்களையும் பெறலாம். ருபாய் 50,000 மதிப்புகொண்ட "டிஜிட்டல் மார்கெடிங்" (Digital Marketing) என்று அழைக்கும் இந்த இலவச பயிற்சியை ஒவ்வொரு வாசகர்வட்ட சந்திப்பு நிகழ்ச்சியிலும் பெறலாம். 

நமது வாசகர் வட்டத்தின் உறுப்பினர்கள் பலர் அவரது இல்லத்தில், அவர்களது அலுவலக வேலை செய்யவும், குழைந்தைகளின் கல்விக்காகவும் High-Speed Internet Broadband /WiFi Connection . என்னும் இனைய வசதி பெற்றிருக்கிறார்கள். அவர்களின் ஆதங்கம் என்னவென்றால்,  ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை இனைய சேவைக்கு செலுத்துவது தவிர்க்கமுடியாததாகிவிட்ட நிலையில், இணையத்திற்காக செய்யும் செலவை மிச்சப்படுத்தவும், வீட்டிலிருந்துகொண்டு அவர்களின் ஒய்வு நேரத்தில் சம்பாதிக்கவும் எளிமையான இலவச பயிற்சி மற்றும் விவரங்களை வரும் வாசகர் வட்ட சந்திப்புகளில் கலந்துகொள்ளும் அனைவரும் பெறலாம். 

முக்கியக் குறிப்பு:- பயிற்சி முழுதும் தமிழில்மட்டுமே  எளியமுறையில் கூகுளின் அனைத்து இலவச செயலி மற்றும் மென்பொருட்களை எப்படி பெறுவது மற்றும் எப்படி கையாள்வது என்கிற அனைத்து இலவச பயிற்சியினக் கொண்டதாக இருக்கும். 



மேலும் இணையவழியில் எப்படி பாதுகாப்பான பண பரிவர்த்தனை செய்வது, பே-பால்(Paypal) என்னும் வெளிநாட்டு பணம், அந்நிய செலவாணியை பெறுவது மற்றும் பே-யு-மணி(Pay-U-Money)என்கிற இந்திய ரூபாய் பணமதிப்பில் பணத்தினை செலுத்தவும் பெறவும், இணையத்தில் சம்பாதிக்கும் பணத்தை வங்கிக் கணக்கிற்கு எப்படி மாற்றிக்கொள்வது என்கிற இலவச மென்பொருட்களை எப்படி பெற்று வலைப்பதிவில் பொருத்துவது போன்ற எளிய பயிற்சி வகுப்பாகவும் இருக்கும்      

பின் குறிப்பு :- பயிற்சி முழுதும் தமிழில்மட்டுமே  எளியமுறையில் கூகுளின் அனைத்து இலவச செயலி மற்றும் மென்பொருட்களை எப்படி பெறுவது மற்றும் எப்படி கையாள்வது என்கிற அனைத்து இலவச பயிற்சியினக் கொண்டதாக இருக்கும். அனைத்து பயிற்சி மற்றும் பரிசுகளும் வாசகர் வட்ட சந்திப்பில் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 

நன்றி 
இப்படிக்கு, 
வைஷாலி வாசகர் வட்டம். 

Sunday 22 May 2016

வைஷாலி வாசகர்வட்ட 28வது சந்திப்பு வரும் 19-06-2016ம் தேதி மாலை 04.00 மணிக்கு

கற்க கசடற….!!                               !! வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
____________________________________________________________

NCR-NEW DELHI -வைஷாலி வாசகர்வட்ட 28வது சந்திப்பு வரும் 19-06-2016ம் தேதி, 3வது ஞயிறு அன்று வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):-  நேரம் மாலை 04.00 மணிக்கு தொடங்கும்... 
ஆனி மாத  தலைப்பு :-தாவரவியல்,  பசுமை தாவரங்கள், எங்க வீட்டு தோட்டம், மணல் தொட்டித் தாவரங்கள்,  நகர்புற அடுக்கு மாடி குடியிருப்பில் தோட்டம். :-


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் எங்க வீட்டு "நூலகம் " படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் எங்க வீட்டு தோட்டம்......
தொடர்ந்து ......இந்த மாத தலைப்பைச் சார்ந்த ...
0. திருக்குறள் போட்டி 
1. புத்தகம் படிக்கும் போட்டி (புதியதாக தொடக்கம்) 
2. பேச்சுப்போட்டி 
3. பாட்டுப்போட்டி 
4. கதைப்போட்டி 
5. கவிதைப்போட்டி
6. கட்டுரைப் போட்டி  
7. புகைப்படப் போட்டி 
8. சித்திரப் போட்டி,
9. சிரிப்புப் போட்டி,
10 "சரித்திரம் முக்கியம்" பகுதி...."ஊட்டி- தாவரவியல்பூங்கா (Ooty Botanical Gardens) மற்றும் மலர் கண்காட்சி உருவான வரலாறு.
11. "கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"-"ஆடிப் பட்டம் தேடி விதை" என ஒரு மாதத்திற்கு முன்பே ஆனி (ஜூன்) மாத வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் "வீட்டுத் தோட்டம்" பெருநகர அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கையில் மிக அதிக லாபம் தரும் எளிமையான வீட்டு வணிகம்-மணல் தொட்டித் தாவரங்கள் மற்றும் வசிப்பிடங்களின் வாஸ்த்து என்னும் வண்ணமயமான பூந்தொட்டி தாவரங்கள், தொங்கும் தோட்டம், மற்றும் "இக்கிபானா" என்னும் போன்சாய்-குட்டி மரங்கள், மேலும் அடுக்கு மாடி குடியிருப்பின் குட்டி பால்கனியின் காய்கறிகள் தோட்டம்.... என எளிமையான வீட்டுத் தோட்டத்தின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மேலும் பல சுவையான விவரங்களுக்கு வாருங்கள் வைஷாலி வாசகர் வட்டத்தின் 28வது வாசகர் வட்ட சந்திப்பு 19-06-2016 தேதி 3வது ஞயிறு அன்று.

12. வழக்காடு மன்றம் அல்லது பட்டி மன்றம். அல்லது குழுப் போட்டி.
13. "வை.வா.வி.வ- இனைய வலைப்பதிவர் பூவிதழ் பக்கம் " - இதழின் இந்த மாத ஆசிரியர்?  படைப்பாளர் பக்கம் பகுதி....
14. சிறப்பு போட்டிப் பரிசு, விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... 

அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?
உதவி மற்றும் விவரங்களுக்கு (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்.

Sunday 15 May 2016

வாசகர் வட்ட சுட்டீஸ்கள்.... இந்தமாத (வைகாசி 15-05-2016) வலைப்பதிவர் இதழில் பல ஆச்சரியமான விவரங்களைத் தொகுத்து தந்திருக்கிறார்கள்.....

வணக்கம், தங்களின் வருகைக்கு நன்றி, NCR - NEW DELHI - வைஷாலி வாசகர் வட்டம் :- நமது வாசகர் வட்ட சுட்டீஸ்கள்.... இந்தமாத (வைகாசி 15-05-2016) வலைப்பதிவர் இதழில் பல ஆச்சரியமான விவரங்களைத் தொகுத்து தந்திருக்கிறார்கள்..... 
"கல்கண்டு" இதழ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் அதுபோல பல சுவையான  விவரங்களுடன் வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் மாத இதழில் தொகுத்து தந்திருக்கிறார்கள்...... இன்று 15-05-2016 இரவு 9மணி அளவில் இதழ்-02 வைகாசி மாத சுட்டீஸ் வலைப்பதிவர் இதழ் வெளியாகும். மறந்துவிடாமல் படியுங்கள் ஒவ்வொரு மாதமும் 3ம் ஞயிறு அன்று வெளியாகும் வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்களின் குலு குலு "குல்கந்து" வலைப்பதிவர் மாத இதழ்... 

முன்னோட்டமாக, வைகாசி மாத இளையவர்களின் வலைப்பதிவர் இதழின் சிறப்பு பகுதியாக :- 
இன்று ஒரு தகவலில் "வீட்டில் மீன் வளர்ப்பதைப்போல கடல் குதிரைகளை வளர்க்கலாமா?"

இந்தியத் தலைநகரான புது தில்லியை இரண்டு பகுதியாகப் பிரித்தால் அதன் ஒரு பகுதி அளவுதான் சிங்கப்பூர் நாடு சிறப்பு தகவல்களைத் தொகுத்திருக்கிறார்கள்.

ரேபீஸ் (Rabies) என்னும் வெறிநாய்-பல்லு, ஜொள்ளு, லொள்ளு:- என சுவைபட பல விவரங்களைத் தந்திருக்கிறார்கள்....

பொது அறிவுத் தகவல்கள் பகுதியில் :- எங்க ஊரில் ஏரியை காணவில்லை என்று ஆராய்ச்சியாலருக்குத் தெரியுமா????? 

தொழிலக மாசு கட்டுப்பாடு மற்றும், பெருகிவரும் பல புதிய விமான நிலையங்களுக்கும் வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் குழந்தைகள் கூறும் இயற்க்கை வளங்களை காப்பாற்ற அறிவுரைகள்?????

உலகிலேயே வேறெங்கும் இல்லாத பல இயற்க்கை அதிசயங்கள் இந்தியாவில் என பல இயற்க்கை அதிசயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள் !!!!!!

பூ உலகின் இருண்டு கிடக்கும் தென் துருவத்தில் (South Pole) இரண்டு பவுர்ணமி நிலவுகளைப் பார்க்கலாம்!!!!!!!???

நல வாழ்வு பகுதியில் ‘ஹெபடைடிஸ்-சி’ வைரஸ் -கல்லீரல் அழற்சி நோய்க்கு இலவச தடுப்பூசி மருந்துகள்?????......

கண்டதை தின்றால் குண்டாகமுடியாது????... "தைராய்டு" என்னும்   நாளமில்லா சுரப்பி (ஹார்மோன்களை) பற்றிய – பிரச்சனைகளும் தீர்வும்...

மேலும் புகைப்படத்தில் இருக்கும் ஆறு-6 வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசை வெல்லுங்கள் பகுதி,  

மேலும் :- கைவண்ணம், கால்வண்ணம் என இரண்டு பகுதியில்:- 
பகுதி I-கைவண்ணம்:-

1) சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில்  :-
(நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)

2. நகைச்சுவை-சிரி-சிந்தி-செயல்படு-பகுதியில் :-
(புகைப்படமும் விளக்கமும்):-

3. சிறுகதைகள் பகுதியில் :- தொகுத்து வழங்கியவர்:

4. கட்டுரை:- உங்கள் கவனத்திற்கு வழங்கியவர்:-

அ ) இன்று ஒரு தகவல் பகுதியில்:-

ஆ) பொது அறிவுத் தகவல்கள் பகுதியில்:-

இ) சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் பகுதியில்:-

ஈ ) நல வாழ்வு பகுதியில்:-

உ ) சமையல் / விருந்துக்கு வாங்க பகுதியில்:-

ஊ) பாட்டி சொல்லைத் தட்டாதே பகுதியில்:-

5. கைத்தொழில் பகுதியில் இந்தமாதம்,:-

6. ஆறு-6 வித்தியாசங்களைக் கண்டுபிடித்து பரிசை வெல்லுங்கள் பகுதி:-  

7. சொர்கமே என்றாலும்  நம்ம ஊரைப் போலவருமா? பகுதி:-
நாம் வசிக்கும் நமது (NCR- New Delhi) புது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்ட எல்லைப்பகுதியில் வாழும் தமிழ் வலைப்பதிவர்களின் இந்தமாத பிரபலமான பதிவுகள் பற்றிய தொகுப்புப் பகுதி  (My Readers Circle NCR- New Delhi Web Page/Blogs for this month) :-

8. அறுவை ஆயிரம்:- 

9. கருத்து சொல்லப்போறேன்:- 

10. புது மொழி:- 

11. கவிதை:- 

12. நமது வாசகர் வட்டத்தின் இந்த மாத சரித்திரம் முக்கியம் பகுதியில்:-

13.விளம்பரதாரர் நிகழ்ச்சி பகுதியில்:- இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர் மற்றும் விளம்பர இடைவேளை (தேநீர் இடைவேளை) மற்றும் விளம்பரதாரர்களின் கண்காட்சி, பயிற்சிப்பட்டறை மற்றும் பல...

14.பயனுள்ள முகநூல் பக்கங்களில் இந்தமாதம் பகுதி:- 

பகுதி II -கால்வண்ணம் :- (நடனம், நாடகம், விளையாட்டு போட்டிகள்) :-

15. இந்த மாத வாசகர் வட்ட நிகழ்ச்சியின் சிறப்பு புகைப்படங்கள் :-

என இன்னும் பல சுவையான விவரங்களோடு, வைஷாலி வாசகர் வட்டத்தின் 5-வயது குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் என இளையவர்கள் சிறப்பாக அவர்களது படைப்புகளை அவர்களே வலைப்பதிவில் பதிக்கும் பொறுப்பேற்றுக்கொண்டு, வலைப்பதிவில் விளையாடிவருகிறார்கள். மறந்துவிடாதீர்கள் ஒவ்வொரு மாதமும், ஆங்கில மாதத்தின் 3ம் ஞாயிறு அன்று, இரவு 9மணி அளவில், வெளியாகும் NCR - NEW DELHI-வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் ரோஜாக்களின் குலு குலு "குல்கந்து" இலவச வலைப்பதிவர் மாத இதழ்... இந்தமாதம் 15-05-2016 அன்று இரவு 9 மணிக்கு, வைகாசி மாத இதழ்-02 வெளியாகிறது.  "http://gulkanthu.blogspot.com/"

இப்படிக்கு நன்றி, வணக்கம். NCR - NEW DELHI-வைஷாலி வாசகர் வட்டம்.

Saturday 7 May 2016

வைகாசி மாத வைஷாலி வாசகர்வட்ட சந்திப்பு வரும் 15-05-2016, 3ம் ஞயிறு அன்று....

NCR-NEW DELHI -வைஷாலி வாசகர்வட்ட சந்திப்பு வரும் 15-05-2016, 3ம் ஞயிறு அன்று வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):-  நேரம் மாலை 03.00 மணிக்கு தொடங்கும்... 

வைகாசி மாத  தலைப்பு :- கோடைக்காலம் (அல்லது) வெப்பம் (அல்லது)  உலக வெப்பமயமாதல் ( அல்லது) சுட்டெரிக்கும் வெய்யில் பாதுகாப்பு:-
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் எங்க வீட்டு "நூலகம்" படித்ததில் பிடித்தது பகுதி....
தொடர்ந்து ......இந்த மாத தலைப்பைச் சார்ந்த ...
0. திருக்குறள் போட்டி 
1. பேச்சுப்போட்டி 
2. பாட்டுப்போட்டி 
3. கதைப்போட்டி 
4. கவிதைப்போட்டி
5. கட்டுரைப் போட்டி  
6. புகைப்படப் போட்டி 
7. சித்திரப் போட்டி,
8. சிரிப்புப் போட்டி,
9. "சரித்திரம் முக்கியம்" பகுதி...."கோடை வாசஸ்தலம் உருவான வரலாறு - குலு குலு குன்னூர் மற்றும் சில்லென்ற சிம்லா  "

10. "கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"- பயிற்சி வகுப்பில் இந்தமாதம்- பயனுள்ள கோடை விடுமுறை பயிற்சிகள்.      
11. வழக்காடு மன்றம் அல்லது பட்டி மன்றம். அல்லது குழுப் போட்டி.
12. "வை.வா.வி.வ- இனைய பூவிதழ் பக்கம் " - இதழின் இந்த மாத ஆசிரியர்?  படைப்பாளர் பக்கம் பகுதி....
சிறப்பு போட்டிப் பரிசு, விமர்சகர் பணமுடிப்பு பரிசு, மேலும் பல .... 

அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?
உதவி மற்றும் விவரங்களுக்கு (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்.