வைஷாலி வாசகர் வட்டம்: November 2015

FREE JOBS - JUST CLICK HEAR

Tuesday 3 November 2015

வைஷாலி வாசகர்வட்ட இந்த மாத (நவம்பர்) தலைப்பு

 "... வாய்ப்பு உள்ளதா?  என்பது முக்கியமல்ல ... கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்பதுதான் மிகவும் முக்கியம்....." 
வைஷாலி வாசகர்வட்ட இந்த (நவம்பர்)மாத  தலைப்பு 
"மகிழ்ச்சி (அல்லது) நெகிழ்ச்சி (அல்லது) இகழ்ச்சி (அல்லது) புகழ்ச்சி " 
வழக்கம்போல:- 
முதலில் எங்க வீட்டு "நூலகம்" பகுதி....
தொடர்ந்து ......இந்த மாத தலைப்பையோட்டிய....
0. திருக்குறள் போட்டி 
1. பேச்சுப்போட்டி 
2. பாட்டுப்போட்டி 
3. கதைப்போட்டி 
4. கவிதைப்போட்டி
5. கட்டுரைப் போட்டி  
6. புகைப்படப் போட்டி 
7. சித்திரப் போட்டி,
8. சிரிப்புப் போட்டி,
9. "சரித்திரம் முக்கியம்" பகுதி....
10. "கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"- பயிற்சி வகுப்பில் இந்தமாதம்?????   
11. வழக்காடு மன்றம் அல்லது பட்டி மன்றம். அல்லது குழுப் போட்டி.
12. "வை.வா.வி.வ- இனைய பூவிதழ்" - இதழின் இந்த மாத ஆசிரியர்?  பகுதி.......
மேலும் பல ....

இடம் ? நாள் ? விரைவில் அறிவிக்கப்படும் .......  

"அகல்" மின்னிதழ் (நவம்பர்) தீபாவளி மலராக

அனைவரும் படித்து பயன்பெற "அகல்" மின்னிதழ் (நவம்பர்) தீபாவளி மலராக சிறப்பாக வெளி வந்துள்ளது. இதழ் உருவாக காரனமானவர்களுக்கும், படைப்பாளிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்! ....அன்புடன் "வைஷாலி வாசகர் வட்டம்". 

Sunday 1 November 2015

FREE-JOBS, இலவச வேலைவாய்ப்பு ஆலோசனை மையம்.:-

FREE-JOBS, இலவச வேலைவாய்ப்பு ஆலோசனை மையம் பற்றிய எங்களுக்குத் தெரிந்த விவரத்தை தெரியப்படுத்துகிறோம். NCR-NEW DELHI வாசகர் வட்ட உறுப்பினர்கள் பலர் அவர்களால் ஆனா இலவச சேவையாக அவர்களது நிறுவனம் சார்ந்த வேலைவாய்ப்பு காலி இடங்கள் பற்றிய விவரத்தை இங்கு தெரியப்படுத்துகிறார்கள். :- 

படித்த பல இளைஞ்சர்கள் சரியான வேலைவாய்ப்பை பெறமுடியாமலும், இலவச ஆலோசனை கிடைக்கும் இடத்தைக்கூட அவர்களால் தெரிந்துகொள்ள முடியாத சூழலில், வெளிநாட்டிலும், இந்திய வடநாட்டின் பல பகுதிகளிலும் இருக்கும் ஏராளமான வேலைவாய்ப்புக்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் "https://in.linkedin.com/in/iubaindia" உங்களை இணைத்துக்கொண்டு தேவையான விவரங்களை முற்றிலும் இலவசமாகப் பெறலாம் என தெரிவிக்கிறார்கள்.   

தென் கிழக்கு ஆசிய பசுபிக் பெருங்கடல் பகுதியிலிருக்கும் பல வெளிநாட்டு நிறுவனக்களில் குறுகியகால சுற்றுலா விசாவில் சென்று வேலைவாய்ப்பினை தெரிந்துகொண்டு பிறகு வேலைவாய்ப்புக்கான உத்தரவு மற்றும் அதற்க்கான விசாவையும் பெரும் சில எளிய வழிமுறைகளை பற்றித் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கிறார்கள். 

கீழ் கண்ட மினஞ்சலில் உங்களது முழு விவரங்களடங்கிய வேலை வாய்ப்பு விண்ணப்பத்தை "IUBAGZB@GMAIL.COM" என்கிற இந்த மின்னஞ்சல் முகவரியில்இணைத்தால் புது தில்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிய்ல் இருக்கும் பல தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெறமுடியும்.  மின்னஞ்சல் அனுப்பியதும் நீங்கள் ஒரு  தானியங்கி பதில் மின்னஞ்சலை பெறுவீர்கள், மேலும் நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் விவரங்கள் தானியங்கி முறையில் 100கும் மேற்ப்பட்ட பல தனியார்  நிறுவனத்தின் மின்னஞ்சல் உள்ளீட்டு பகுதிக்கு (HR-MAIL IN BOX) சென்றுவிடும். தேர்ந்தெடுக்கப்படும்  நபர்கள் நிறுவனத்திலிருந்து நேரடியாகவோ அல்லது  "IUBA-INDIA"  என்கிற இலவச ஆலோசனை வழங்கும் சேவை நிறுவனத்தின் வழியோ உங்களுக்கு தெரிவிக்கப்படும்.  இது முற்றிலும் இலவச சேவையாக வழங்கப்படுவதால், அவசர நெருக்கடி தராமல்,  நிதானமும் பொறுமையும் பின்பற்றவேண்டியது மிகவும் அவசியம்.    

முக்கியமாக ஹிந்தி மொழி தெரிந்திருக்கவேண்டும், மேலும் வட மாநிலத்தின் ஆறுமாதம் கடும் குளிர் காலம் மற்றும் ஆறுமாதம் கடுமையான வெப்பம் போன்ற தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை மற்றும் உணவு பழக்கத்திருக்கு உங்களை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பவர் மட்டுமே வடநாட்டின் வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்கள். 

ஹிந்தி மொழி கற்றுக்கொள்ளுங்கள். புது தில்லியிலிருந்து இலாவசமாக ஹிந்தி கற்றுக்கொள்ள தேவையான புத்தகங்கள் மற்றும் பிற உதவிகள் "தட்சின் பாரத் ஹிந்தி பிரசார சபா" "Dakshina Bharat Hindi Prachar Sabhaஎன்கிற நமது பாரத தேசத்தின் ஹிந்தி மொழியை கற்க விரும்பும் அனைவருக்கும் இலவச சேவையை வழங்கிவருகிறது  http://www.dbhpscentral.org/

குறிப்பு:- வாசகர் வட்டம் இதை ஒரு சேவை மனப்பான்மையோடு தெரிவிக்கிறது.  மேலும் வாசகர் வட்டத்திற்கும் மேற்கண்ட இந்த சேவைகளுக்கும் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

நன்றிகளுடன் (வை.வா.வி வ).