வைஷாலி வாசகர் வட்டம்: August 2017

FREE JOBS - JUST CLICK HEAR

Monday 21 August 2017

ஆவணி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-17.

@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... ஆவணி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-17.


சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். 

போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-09-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

Thursday 17 August 2017

சிறந்த படைப்புகள் வரவேற்கப்படுகின்றன:-சென்றமாத வைஷாலி வாசகர் வட்ட, சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவு இதழின் புதிர் போட்டியின் முடிவுகளும்:-


சிறந்த படைப்புகள் வரவேற்கப்படுகின்றன:- புதுதில்லி மற்றும் NCR-NEW DELHI என்ற புது-தில்லி தலைநகர் மற்றும் தலைநகரின் சுற்றுவட்ட எல்லையோர பகுதிகளான உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் (பிவாடி Bhiwadi) மாநிலத்தின் எல்லையோர பகுதியில் வசிக்கும் தமிழர்களும் தங்களது படைப்புக்களை எங்களுக்கு "vaishalireaderscircle@gmail.com" என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பிவையுங்கள், சிறந்த படைப்புக்கள் ஒவ்வொரு மாத வைஷாலி வாசகர் வட்ட, சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" http://gulkanthu.blogspot.in/ வலைப்பதிவு இதழில் பதிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களது படைப்புக்களை சமர்ப்பிக்க:-   நீங்கள் வரைந்த ஓவியம் மற்றும் நீங்கள் எழுதிய தமிழ் கவிதை, கதை, கட்டுரைப் படைப்புக்களை எங்களுக்கு "vaishalireaderscircle@gmail.com" என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பினால் அவையனைத்தையும் வைஷாலி வாசகர் வட்ட, சுட்டீஸ் ரோஜாக்களின்  "குல்கந்து"http://gulkanthu.blogspot.in/ வலைப்பதிவு இதழில் பதிக்கப்படும்.  

வைஷாலி வாசகர் வட்ட, சுட்டீஸ் ரோஜாக்களின்  "குல்கந்து" வலைப்பதிவு இதழில் http://gulkanthu.blogspot.in/ இலவசமாக விளம்பரம் செய்ய:-  உங்களது விளம்பர படத்துடன், மின்னஞ்சல் மற்றும் உங்களது தொலைப்பேசி, இனைய முகவரி விவரங்களையும் குறிப்பிட்டு "vaishalireaderscircle@gmail.com" என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பிவையுங்கள் சிறந்த சரியான விளம்பரங்கள், இலவசமாக ஒவ்வொரு மாத இதழிலும் பதிக்கப்படும் என்பதை மகைழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். (குறிப்பு:- ஒவ்வொரு மாதமும் 10,000 பத்தாயிரத்திற்கும் அதிகமான, இந்தியா மற்றும் வெளிநாட்டு வாசிப்பவர்களின் பார்வைகள் கொண்ட வலைப்பதிவு இதழ்)

சமீபத்திய போட்டிகள் மற்றும் பரிசுகள்:- சென்றமாத (ஆடி-மாதம்)  :- வைஷாலி வாசகர் வட்ட, சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" http://gulkanthu.blogspot.in/ வலைப்பதிவு இதழின் படத்தில் உள்ள 8-எட்டு வித்தியாசங்களை கண்டுபிடித்து கூறவும் என்ற புதிர் போட்டியின் விடையும் முடிவுகளும்:-

சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-16  ஆடி -மாதம்  வலைப்பதிவு இதழ், எட்டு வித்தியாசப் போட்டி என்-16. போட்டிக்கான  சரியான  விடை,


விடை:- 1. இரண்டில் ஒருபடம் இடம் வலமாக திரும்பியுள்ளது, 2) அம்பாள் கையிலிருக்கும் சங்கு,  3) அம்பாளின் வெள்ளித்தலை விக்கிரகம், 4) குத்துவிளக்கருகில் இருபுறமும் சங்கு, 5) குத்துவிளக்கின் தலைப்பகுதி, 6) உடுக்கையில் பாம்பு, 7) குத்துவிளக்கு தூணின் அருகே இருக்கும் வெள்ளி சொம்பு, 8) தட்டு நிறைய ரோஜாப்பூ.

சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் வலைப்பதிவர் இதழ்-16 போட்டிக்கான சரியான விடையை 82 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=42, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=25, முழுமையான ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=15, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...



Friday 11 August 2017

வைஷாலி வாசகர் வட்ட 42வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=17 ஆவணி மாதம்-தேதி 20-08-2017. "கைத்தொழில் பழகலாம் வாருங்கள்...."

வைஷாலி வாசகர் வட்ட 42வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து"  இதழ்=17 ஆவணி மாதம், தேதி-20-08-2017. "கைத்தொழில் பழகலாம் வாருங்கள் ...."


வைஷாலி வாசகர் வட்டத்தின் 42வது வாசகர் வட்ட சந்திப்பு 20-08-2017 தேதி,   ஒவ்வொரு மாதத்தின் 3-வது    ஞயிறு    அன்றய   (ஆவணி    மாத) மாலைநேர கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் .... அன்று மாலை 4.00pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

(AUG to SEP-2017)-ஆவணி மாதம்:- 

"கைத்தொழில் பழகலாம் வாருங்கள்...."விழிப்புணர்வு பயிற்சி. 

வைஷாலி வாசகர்வட்ட 42வது சந்திப்பு,  -ஆவணி மாதம் முழுவதும் :- கைத்தொழில் பழகலாம் வாருங்கள்.... கைத்தொழிலை சுயத்தொழிலாக தான் மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. ஆர்வத்திலும் கைத்தொழிலை பழகலாம். புதிதாக ஒன்றை உருவாக்கும் திருப்தியை தரும் கைத்தொழில் மூலம் கிடைக்ககூடிய ஆனந்தமும் சுய திருப்தியும் அளவில்லாதது. அதிலும் நமக்கு தேவையான பொருட்களை நம் கைகளாலேயே உருவாக்கி கொள்ளும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தி அனுபவித்து பார்த்தால் மட்டுமே தெரியும். இருப்பினும் வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும் சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த கைத்தொழில் பழகிய அனுபவங்களையும் அவர்களுக்கு தெரிந்த விவரங்களையும் தொகுத்து இந்த மாத வலைப்பதிவு இதழை சிறப்பித்திருக்கிறார்கள். 


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு, 
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து.. 
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/  


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...

சிறுவர் சிறுமியர்களுக்கு எழில்-"எழுதி" தமிழ் கணினி மொழி

சிறுவர் சிறுமியர்களுக்கு எழில்-"எழுதி" தமிழ் கணினி மொழி 

வணக்கம் வாசக நண்பர்களே,

சில வாரங்களுக்கு முன்பு எழில் மொழியை சரிவர பெற்று உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்துவது பற்றியும், நம்மை அணுகக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு எப்படி கணினியியல் "எழில்" வழி கற்றிக்கொள்வது என்பது பற்றியும் 60 நிமிடங்களுக்கான விடியோக்கள் தயாரிக்கப்பட்டன.

இவற்றை இங்கு காணலாம் - https://www.youtube.com/playlist?list=PLo6YZ6ilTE53mRVQelij9lXg6xiOonhXM 

முடிந்தவரையில் இதை பகிருங்கள், பயன்படுத்துங்கள். 

உங்களது பின்னூட்டங்களையும், கேள்விகளையும் ezhillang@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பவும்.

நன்றிகளுடன் வைஷாலி வாசகர் வட்டம்.
தேசிய தலைநகர் எல்லைப்பகுதி- கிழக்கு தில்லி (NCR-New Delhi)