வைஷாலி வாசகர் வட்டம்

FREE JOBS - JUST CLICK HEAR

Tuesday, 4 April 2017

38வது வைஷாலி வாசகர்வட்ட சந்திப்பு முதல், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்..

வருகிற  16-04-2017 அன்றய 38வது வைஷாலி வாசகர்வட்ட சந்திப்பு முதல், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்.


வருகிற  16-04-2017 அன்றய  38வது வைஷாலி வாசகர்வட்ட சந்திப்பு முதல், "ஹே விளம்பி-வருட" சித்திரைத் தமிழ் வருடப்பிறப்பு முதல், ஒவ்வொருமாதமும்  ஒரு கொண்டாட்டம், என இந்த வருடம் முழுவதும் கற்றுக்கொள்வோம், தெரிந்துகொள்வோம் பயிற்சிப் பட்டறை மாதங்களின் வருடமாக, நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்...

1. (Apr to May)-சித்திரை மாதம் முழுவதும் :- கணினியில் தமிழ், கை தொலைப்பேசியில் தமிழ் என நவீன வழியில் தமிழ் மொழியை எடுத்தாளும் பயிற்சி.  

2. (May to Jun)-வைகாசி மாதம் முழுவதும்:- கல்வித் தேர்வு மற்றும் பொது அறிவு தேர்வு, போன்ற பல்வேறு தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளுதல் பற்றிய பயிற்சி.   

3. (Jun to Jul)-ஆனி மாதம் முழுவதும்:- இயற்கைத் தாவர தோட்டம் அமைப்பது, வீட்டு வளர்ப்புப் பிராணிகள் / செல்லப் பிராணிகள் பராமரிப்பு  மற்றும் மாசு கட்டுப்பாடு  பற்றிய விழிப்புணர்வு பயிற்சி. 

4. (Jul to Aug)-ஆடி மாதம் முழுவதும் :- ஆன்மீக பழக்கவழக்கங்கள் மற்றும் ஜோதிடம் வானவியல் கோள்களின் இயக்கம் பற்றிய கணிதம், பஞ்சாங்கம், வாஸ்து, கைரேகை, எண்கணித பலன்களும் பயிற்சியும்.

5. (Aug to Sep)-ஆவணி மாதம் முழுவதும் :- கைத்தொழில் பழகலாம் வாருங்கள்....

6. (Sep to Oct)-புரட்டாசி மாதம் முழுவதும் :- ஆழ்நிலை தியான பயிற்சியும், உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி போன்ற பலநிலைகளைப்பற்றிய பயிச்சி வகுப்புகள். 

7. (Oct to Nov)-ஐப்பசி மாதம் முழுவதும் :- துப்பறியும் நிபுணர்கள் மற்றும் துப்பு துலக்கும் நவீன தொழில்நுட்பம் பற்றிய பயிச்சி வகுப்புகள். (சிறப்பு விருந்தினராக காவல் துறை அதிகாரி கலந்துகொள்ளும் சிறப்பு சந்திப்பு பட்டறை) 

8. (Nov to Dec)-கார்த்திகை மாதம் முழுவதும் :- மனையியல் (Home science) பயிற்சி மற்றும் நமது இல்லம்-அழகு கலை, சமையல் கலை பயில்வோம் வாருங்கள். 

9. (Dec to Jan)-மார்கழி மாதம்:- சங்கீதமும் இங்கீதமும் பழகுவோம்.... பஜனை பாடல்கள் பாடி அசத்துவோம் வாருங்கள்..... (தாள வாத்தியங்களும், வாய்ப்பாட்டும்) 

10.(Jan to Feb)- தைமாதம்:- சிறப்பு விருந்தினர் பகுதியில் கற்றுக்கொள்வோம் வாருங்கள்.... முத்தமிழ் பழகுவோம் வாருங்கள், இயல் இசை நாடகம் பற்றிய எளிய பயிற்சியும் நிகழ்ச்சியும்.  

11.(Feb to Mar)-மாசி மாதம்:-  மருத்துவம் சார்ந்த முதல் உதவி பயிற்சி மற்றும் மருத்துவ சேவைகள் பற்றிய  விழிப்புணர்வு பயிற்சி. (சிறப்பு விருந்தினராக மருத்துவர்  கலந்துகொள்ளும் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி)  

12.(Mar to Apr)-பங்குனி மாதம்:-சமூக அறிவியலில் புள்ளியியல் பயன்பாடு பற்றிய -பயிற்சிப்-பட்டறை. (வணிகவியல் மற்றும் புள்ளியில் நிபுணர், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்) 
   
மேற்கண்ட ஒவ்வொரு மாதக் கொண்டாட்டங்களின் தலைப்புகளைக் கொண்ட பயிற்சிப்-பட்டறை நிகழ்சிகளாக வாசகர் வட்ட சந்திப்பு அமையும் என்பதால், வாசகர் வட்ட சந்திப்புகளில் கலந்துகொள்ளும் அனைவரும் அந்த அந்த மாத தலைப்புகளை சார்ந்த போட்டி நிகழ்சிகளில் பங்குகொண்டு ஏராளமான பரிசுகளை வெல்லலாம். 

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்

Wednesday, 22 March 2017

சித்திரைத் தமிழ் மொழி மாத ஆட்டம் பாட்டம் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான ஒரு தலைப்பை தேர்ந்தெடுங்கள்.


வருகிற சித்திரைத் தமிழ் புத்தாண்டின் 38வது வாசகர்வட்ட நிகழ்ச்சியின், தமிழ் மொழி மாத ஆட்டம் பாட்டம் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான ஒரு தலைப்பை தேர்ந்தெடுங்கள்.

அனைவரது வாழ்க்கையிலும் அரிதாகிவிட்ட
அ) குழந்தை மனது
ஆ) வெள்ளை உள்ளம்
இ) நம்பிக்கை எண்ணம்

@ மனசிருக்கணும் மனசிருக்கணும். பச்சப் புள்ளையாட்டம்

@ உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத வெள்ளை உள்ளம் கொண்டவர்...

@ எவனொருவன் எந்த மாதிரியான நம்பிக்கை எண்ணம் உடையவனோ, அந்த மாதிரியாகவே அவன் ஆகிறான்.

உங்களது மனது என்ன சொல்கிறது??? சிறந்த ஒரு தலைப்பை தேர்ந்தெடுங்கள் ... கொண்டாடுவோம்.... வாருங்கள் சித்திரைத் தமிழ் மொழி மாதக் கொண்டாட்டங்கள்.

நன்றிகளுடன் வைஷாலி வாசகர் வட்டம் ...

Sunday, 19 March 2017

"பங்குனி-மாத-படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவுஇதழ் போட்டி என்-12.

ஆறு வித்தியாச கணக்கு புதிர் :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "பங்குனி-மாத-படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவுஇதழ் போட்டி என்-12.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-04-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

=======================================
சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-11   பிப்ரவரி-2017 மாசி-மாதம் அன்பு/ நட்பு/ குடும்ப பாச மாதக்கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் வலைப்பதிவு இதழ் போட்டி என்-11. ஆறு- வித்தியாசங்கள் போட்டிக்கான  சரியான  விடை,
1) காகித தோரணம்  2) கோபுர உச்சியில் உட்கார்ந்திருக்கும் காகம் 3) மணப்பெண்ணின் ஜொலிக்கும் வைர மூக்குத்தி 4) மாப்பிள்ளை நெத்தியில் சந்தனப்பொட்டு 5அருகிலிருக்கும் மாப்பிள்ளைத் தோழனின் மூக்கு கண்ணாடி 6) வழக்கமான ஓவியம் வரைந்தவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கையொப்பத்தில் வட்டம் அல்லது பெயரின் கீழ் கோடிட்டு காட்டுதல்.  

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 45 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=19, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=11, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=15, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.

Saturday, 18 March 2017

மொத்தம் 30வகை கணக்கு விளையாட்டை விளையாடலாம் வாங்க.

வணக்கம் ...தங்களின் வருகைக்கு நன்றி,... வலைப்பதிவு இதழில் உலவுவதற்காக வருகைதந்த  தங்களை அன்புடன்  அழைத்துச் செல்கிறோம்  வாருங்கள்....


இந்த வலைப்பதிவு இதழின் நோக்கம்:- அனைவருக்கும் கணினியில், தமிழில் வலைப்பதிவுகளை பதிவுசெய்யும் பயிற்சியும், ஒரு புத்தகம், ஒரு  இதழ், ஒரு செய்தித்தாள் போன்றவற்றிக்கு எப்படியெல்லாம் செய்திகளை சேகரித்துத் தருவது என்பதைப்பற்றியும்,   ஒரு  இதழை அல்லது  செய்தி பத்திரிக்கைகளை எப்படியெல்லாம்  வடிவமைத்து அழகுபடுத்தி வெளியிடுவது என்கிற எளிய பயிற்சியும்,  எப்படி நம்முடைய அல்லது பத்திரிக்கையின் கருத்தை, தலைப்பு செய்திகளாக வெளிபடுத்தும் விதம்... மற்றும்  வாசகர்களின்  கவனத்தை ஈர்க்கும் வகையில் எப்படியெல்லாம் நமது பதிப்புகள்  இருக்க வேண்டும். போன்ற பல்வேறு  பயிற்சிகளை அனைவரும் எளிதில் பெறுவதற்காக, புது தில்லி மற்றும் அதன் எல்லையோரம் இருக்கும் மாநிலங்களில் வசிக்கும் தமிழ் இளைய தலைமுறையினரான சுட்டீஸ் சிறுவர்களை ஒன்றிணைத்து அவர்களோடு அவர்களது பெற்றோர்களையும் முன்னிறுத்தி செய்யும் ஒரு, எளிய பயிற்சி வலைப்பதிவு இதழ் "சுட்டீஸ்-குல்கந்து"  http://gulkanthu.blogspot.in/


இந்த இதழில் நிறைய நிறை, குறைகள் இருந்தாலும் பத்திரிக்கைத்துறையின் அருமை பெருமைகளை இளம் மனதினில் விதைப்பதே எங்கள் நோக்கம்.... இப்படிக்கு வைஷாலி வாசகர் வட்டம். 


வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து"  இதழ்=12 பங்குனி மாதம்-தேதி 19-03-2017.அன்று வெளியாகும் "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் இதழில்.... மறந்துவிடாதீர்கள் 19-03-2017 அன்று இரவு 9மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் வலைப்பதிவர் இதழ்

ஒவ்வொரு ஆங்கில மாதமும் 3வது ஞாயிறு  (அதாவது- தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு) அன்று வழக்கமாக வெளியாகும் NCR-புதுதில்லி-வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவர் இதழ்.  

மொத்தம் 30வகை கணக்கு விளையாட்டை விளையாடலாம் வாங்க.. என்று அழைக்கிறார்கள். வைஷாலி வாசகர்வட்ட 37வது சந்திப்பு, பங்குனி மாதம் :-கணக்கு  வழக்கு மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்.  

இந்த இதழின் குட்டி கல்கண்டு தகவல்கள் பகுதியில் :-  .1) காந்தி கணக்கு புதிர், 2).வாழ்க்கைக்கு கணக்கு புதிர் , 3)பேசும் மொழிக் கணக்கு புதிர், 4)கருத்துக் கணக்கு புதிர், 5)காப்பீட்டுக் கணக்கு புதிர் , 6)ஆறு வித்தியாச கணக்கு புதிர் , 7)புத்திசாலி கணக்கு புதிர், 8)தமிழ் கணித அளவைகள் புதிர், 9)பலகாரம் தின்ற நாள் கணக்குப் புதிர், 10) மனக் கணக்கு புதிர், 11)மின்னல் கணித புதிர், 12)சிரிப்புக்கு கணக்கு புதிர், 13) கமர்கட்டுகளில் கணக்கு புதிர், 14)வியாபார கணக்கு புதிர் விளையாட்டு, 15)தன்னாம்பிக்கைக் கணக்கு புதிர், 16)மனக்கணக்கின் மகிமைகள், 17)மனக்கணக்குப் பயிச்சி விளையாட்டு-1, 18)மனக்கணக்குப் பயிச்சி விளையாட்டு-2, 19)மனக்கணக்குப் பயிச்சி விளையாட்டு-3, 20)மனக்கணக்குப் பயிச்சி விளையாட்டு-4,  21) பூமியின் பூஜ்ய எடைப் புதிர், 22)ஈசி மேஜிக் புதிர் கணக்கு, 23)கணிதத்தில் மேஜிக்-தந்திர எழுத்து புதிர், 24)கணித மதிப்பு 'X' புதிர், 25)கணிதத்தில் அதிசயங்களும் ஆச்சரியங்களும், 26)விசித்திர கணக்கு வழக்கு,  27)எதிர்மறைக் கணக்கு புதிர், 28)பாகப்பிரிவினைக் கணக்கு புதிர் விளையாட்டுக்கு கதை , 29)குட்டிப்போடும் வட்டிக்கணக்கு புதிர் விளையாட்டு கதை, 30)வட்டிக்கணக்கு புதிர், 31)மரண கணக்கு புதிர், 32)சித்திரக்கணக்கு புதிர், 33)வாகன விளையாட்டு கணக்கு புதிர், 34)வெற்றிக்கணக்கு புதிர், 35)சேவை கணக்கு புதிர், என பல விவரங்களோடு  36) பங்குனி மாதத்தின் சிறப்புக்கள்-30... என மேலும் பல விவரங்களை பதிவுசெய்திருக்கிறார்,  

அதோடு கணித விளையாட்டு, கணித பாட்டு, கணிதக் கதைகள் மற்றும் கட்டுரைகள், கணக்கு வழக்குகள்  சார்ந்த போட்டிகளும் பரிசுகளும், கொண்டாட்டங்களும்  என  இந்தமாத இதழில் சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளையும்  மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....  http://gulkanthu.blogspot.in/

வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து"  இதழ்=12 பங்குனி மாதம்-தேதி 19-03-2017.   http://gulkanthu.blogspot.in/

Friday, 10 March 2017

வைஷாலி வாசகர்வட்ட 37வது சந்திப்பு பங்குனி மாதம்:-கணக்கு வழக்கு மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்..

வைஷாலி வாசகர்வட்ட 37வது சந்திப்பு, (Mar to Apr)-பங்குனி மாதம்:-கணக்கு வழக்கு மாதக் கொண்டாட்டங்களும்.  நிகழ்ச்சிகளும்.
"ஆற்றில் கொட்டினாலும் அளந்துதான் கொட்டவேண்டும்"  என்கிற பழமொழிக்கேற்ப இந்த ஆண்டின் இறுதி  மாதமான பங்குனி மாதம்:-கணக்கு வழக்கு மாதக் கொண்டாட்டங்களும்  நிகழ்ச்சிகளும்.  வருகை தாருங்கள் NCR-New Delhi வைஷாலி வாசகர் வட்டத்தின் 37வது வாசகர் வட்ட சந்திப்பு 19-03-2017 தேதி, 3-வது ஞயிறு அன்றய பங்குனி மாத கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்  நமது  வைஷாலி செக்டர்-4 மையப்பூங்கவில் (Sector-4, Central Park, Near Sector-4 Water Tank):-  நேரம் மாலை 04.00 மணிக்கு தொடங்கும்... 


ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை. இந்த சிறப்புகளெல்லாம் அந்த மாதங்களில் அமையும் சிறப்புவாய்ந்த நாட்களை நினைவுகூறுமாறு, வழிபாடுகளையும்,  திருவிழாக்களையும் கொண்டே அமைகின்றன. அவ்வகையில் பங்குனி மாதத்தின் சிறப்பு சிலவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம். அதோடு கணித விளையாட்டு, கணித பாட்டு, கணிதக் கதைகள் மற்றும் கட்டுரைகள் என கணக்கு வழக்குகள் சார்ந்த போட்டிகளும் பரிசுகளும்  ....

மேலும் பல சுவையான விவரங்களுக்கு, குட்டி கல்கண்டு, சிறுகதை போட்டி, ஆறு வித்தியாசங்களை கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள் போன்ற பல நிகழ்ச்சிகளுக்கு வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பு. பங்குனி மாதம்:-கணக்கு வழக்கு மாதக் கொண்டாட்டங்களும்  நிகழ்ச்சிகளும்..
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்)
தொடர்ந்து ......

"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .

# சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... 

அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?.... உதவி மற்றும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....

Sunday, 19 February 2017

"மாசி மாத-சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்".

மாசி மாத சுட்டீஸ் குல்கந்து இதழின் http://gulkanthu.blogspot.in/ சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்".
படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் - பிப்ரவரி-2017 மாசி-மாதம் அன்பு/ நட்பு/ குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்-வலைப்பதிவு இதழ் போட்டி என்-11.



சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-03-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

முழு விவரங்கள் வைஷாலி வாசகர் வட்ட மாசி மாத சுட்டீஸ் குல்கந்து இதழின் "http://gulkanthu.blogspot.in" வலைப்பதிவில் காண்க.


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....

Wednesday, 15 February 2017

சென்ற மாத ஆறு- வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை & பரிசு.

சென்ற மாத ஆறு- வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை:- "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-10  சனவரி-2017 தை-மாதம் "பொங்கலோ பொங்கல்"  நன்றி கூறும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்- வலைப்பதிவு இதழ் போட்டி என்-10 ஆறு- வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை
1) காகித தோரணம்  2) வானத்தில் பறவைகள் பறப்பது 3) மாட்டின் நெற்றியில் குங்குமப்பொட்டு 4) விவசாயியின் சட்டை  5) பொங்கல் பானை கைக்கரண்டி 6) வழக்கமான ஓவியம் வரைந்தவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கையொப்பத்தில் வட்டம் அல்லது பெயரின் கீழ் கோடிட்டு காட்டுதல்.  

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 34 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=12, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=10, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=12, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்....