வைஷாலி வாசகர் வட்டம்: 38வது வைஷாலி வாசகர்வட்ட சந்திப்பு முதல், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்..

FREE JOBS - JUST CLICK HEAR

Tuesday, 4 April 2017

38வது வைஷாலி வாசகர்வட்ட சந்திப்பு முதல், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்..

வருகிற  16-04-2017 அன்றய 38வது வைஷாலி வாசகர்வட்ட சந்திப்பு முதல், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்.


வருகிற  16-04-2017 அன்றய  38வது வைஷாலி வாசகர்வட்ட சந்திப்பு முதல், "ஹே விளம்பி-வருட" சித்திரைத் தமிழ் வருடப்பிறப்பு முதல், ஒவ்வொருமாதமும்  ஒரு கொண்டாட்டம், என இந்த வருடம் முழுவதும் கற்றுக்கொள்வோம், தெரிந்துகொள்வோம் பயிற்சிப் பட்டறை மாதங்களின் வருடமாக, நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்...

1. (Apr to May)-சித்திரை மாதம் முழுவதும் :- கணினியில் தமிழ், கை தொலைப்பேசியில் தமிழ் என நவீன வழியில் தமிழ் மொழியை எடுத்தாளும் பயிற்சி.  

2. (May to Jun)-வைகாசி மாதம் முழுவதும்:- கல்வித் தேர்வு மற்றும் பொது அறிவு தேர்வு, போன்ற பல்வேறு தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளுதல் பற்றிய பயிற்சி.   

3. (Jun to Jul)-ஆனி மாதம் முழுவதும்:- இயற்கைத் தாவர தோட்டம் அமைப்பது, வீட்டு வளர்ப்புப் பிராணிகள் / செல்லப் பிராணிகள் பராமரிப்பு  மற்றும் மாசு கட்டுப்பாடு  பற்றிய விழிப்புணர்வு பயிற்சி. 

4. (Jul to Aug)-ஆடி மாதம் முழுவதும் :- ஆன்மீக பழக்கவழக்கங்கள் மற்றும் ஜோதிடம் வானவியல் கோள்களின் இயக்கம் பற்றிய கணிதம், பஞ்சாங்கம், வாஸ்து, கைரேகை, எண்கணித பலன்களும் பயிற்சியும்.

5. (Aug to Sep)-ஆவணி மாதம் முழுவதும் :- கைத்தொழில் பழகலாம் வாருங்கள்....

6. (Sep to Oct)-புரட்டாசி மாதம் முழுவதும் :- ஆழ்நிலை தியான பயிற்சியும், உடற்பயிற்சி மற்றும் மூச்சுப்பயிற்சி போன்ற பலநிலைகளைப்பற்றிய பயிச்சி வகுப்புகள். 

7. (Oct to Nov)-ஐப்பசி மாதம் முழுவதும் :- துப்பறியும் நிபுணர்கள் மற்றும் துப்பு துலக்கும் நவீன தொழில்நுட்பம் பற்றிய பயிச்சி வகுப்புகள். (சிறப்பு விருந்தினராக காவல் துறை அதிகாரி கலந்துகொள்ளும் சிறப்பு சந்திப்பு பட்டறை) 

8. (Nov to Dec)-கார்த்திகை மாதம் முழுவதும் :- மனையியல் (Home science) பயிற்சி மற்றும் நமது இல்லம்-அழகு கலை, சமையல் கலை பயில்வோம் வாருங்கள். 

9. (Dec to Jan)-மார்கழி மாதம்:- சங்கீதமும் இங்கீதமும் பழகுவோம்.... பஜனை பாடல்கள் பாடி அசத்துவோம் வாருங்கள்..... (தாள வாத்தியங்களும், வாய்ப்பாட்டும்) 

10.(Jan to Feb)- தைமாதம்:- சிறப்பு விருந்தினர் பகுதியில் கற்றுக்கொள்வோம் வாருங்கள்.... முத்தமிழ் பழகுவோம் வாருங்கள், இயல் இசை நாடகம் பற்றிய எளிய பயிற்சியும் நிகழ்ச்சியும்.  

11.(Feb to Mar)-மாசி மாதம்:-  மருத்துவம் சார்ந்த முதல் உதவி பயிற்சி மற்றும் மருத்துவ சேவைகள் பற்றிய  விழிப்புணர்வு பயிற்சி. (சிறப்பு விருந்தினராக மருத்துவர்  கலந்துகொள்ளும் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி)  

12.(Mar to Apr)-பங்குனி மாதம்:-சமூக அறிவியலில் புள்ளியியல் பயன்பாடு பற்றிய -பயிற்சிப்-பட்டறை. (வணிகவியல் மற்றும் புள்ளியில் நிபுணர், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்) 
   
மேற்கண்ட ஒவ்வொரு மாதக் கொண்டாட்டங்களின் தலைப்புகளைக் கொண்ட பயிற்சிப்-பட்டறை நிகழ்சிகளாக வாசகர் வட்ட சந்திப்பு அமையும் என்பதால், வாசகர் வட்ட சந்திப்புகளில் கலந்துகொள்ளும் அனைவரும் அந்த அந்த மாத தலைப்புகளை சார்ந்த போட்டி நிகழ்சிகளில் பங்குகொண்டு ஏராளமான பரிசுகளை வெல்லலாம். 

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்

4 comments:

  1. அருமையான முயற்சி
    திட்டமிட்டபடி நிகழ்வுகள் சிறப்பாய் அமைய
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல முயற்சி வெற்றிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete