வைஷாலி வாசகர் வட்ட 45வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=20 கார்த்திகை மாதம், தேதி-19-11-2017. ஆங்கில மாதத்தின் மூன்றாவது ஞாயிறு அன்று:- "மனையியல்" நுண்ணறிவு சிறப்பு பயிற்சி பட்டறை.
"மனையியல்" பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்"
ஒரு ஞாயிறு மாலையை பயனுள்ளதாக்க வருகை தாருங்கள் ! வைஷாலி வாசகர் வட்டத்தின் 45வது வாசகர் வட்ட சந்திப்பு 19-11-2017 தேதி, ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் 3-வது ஞயிறு அன்றய (இந்தமாதம் கார்த்திகை மாத) மாலைநேர பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் .... மாலை 4.00pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi.
@ வடையில் 30 வகைகளா? அதுவும் தவளை வடையா???
@ எனக்கு சமைக்கத்தெரியும்...
@ நான் சுவையான தேநீர் மற்றும் காப்பி தயாரிப்பேன்...
@ எனக்கு ஊறுகாய் போடத்தெரியும் ...
@ என்வீட்டை அழகுபடுத்துவதில் எனக்கு மிகவும் பிடிக்கும்...
வாருங்கள் உங்களின் வீட்டை எப்படியெல்லாம் அழகுபடுத்தி நிர்வகிக்கலாம் என்று பயிற்சிபெறுவோம், பயன்பெறுவோம். இதில் ஒவ்வொரு வீட்டின் குழந்தைகளுக்கும் நிறைய பங்குண்டு. நமது மனதிற்கு மகிழ்ச்சியைத்தருவது நமது வீடு ஆகவே அப்படிப்பட்ட உங்களின் வீட்டை நீங்கள் எப்படியெல்லாம் அழகுபடுத்தி நிர்வகித்து பலவிவரங்களை தெரிந்துகொண்டு பயனடைத்திருக்கிறீர்கள் என்று கூறுவதோடு மேலும் பல விவரங்களை தெரிந்துகொண்டு பயனடைவதற்கும் இந்த "மனையியல்" பயிற்சி மாதக் கொண்டாட்டம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம். மறந்துவிடாதீர்கள் வைஷாலி வாசகர் வட்ட 45வது சந்திப்பு... நமது சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவிற்கு "மனையியல்" சார்ந்த கதை, கட்டுரை, கவிதை, ஓவியம் போன்றவற்றை தயார் செய்து வையுங்கள்...
வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ். http://gulkanthu.blogspot.in/
( NOV to DEC-2017)-கார்த்திகை மாதம்:-
""மனையியல்" பயிற்சி- பற்றிய தொழில் நுணுக்கங்களைப்பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள் ...." இது ஒரு விழிப்புணர்வு பயிற்சி பட்டறை.
வைஷாலி வாசகர்வட்ட 45வது சந்திப்பு, - வழக்கமாக இந்தமாதமும் விழிப்புணர்வு பயிற்சிமாதமாக ""மனையியல்" நுண்ணறிவு சிறப்பு பயிற்சி பட்டறை." சிறப்பு விருந்தினர் மற்றும் வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும், சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த மனையியல்(ஹோம் சயின்ஸ்) விவரங்களை ஒன்று திரட்டி "சுட்டீஸ் குகலந்து" -20-வது இதழை உருவாக்கிவருகிறார்கள்.
மனையியல் படிப்பு என்பது சாதாரணமான வீட்டு வேலைகளை எப்படி செய்வது என்று மட்டும் சொல்லித்தருவதில்லை. மாறாக, எவ்வாறு நமது உடல் செயல்படுகிறது, சத்துணவு பற்றிய உண்மைகள், தனிப்பட்ட மற்றும் சுற்றுப்புற தூய்மை, உங்களின் குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்ப் பட்டிருந்தால், அவர்களை எப்படி கவனிப்பது, உங்களின் நேரம், பணம் மற்றும் ஆற்றலை சேமிக்க வேண்டுமெனில், எதுபோன்ற துணிகளை உடுத்துவது போன்ற முக்கிய விஷயங்களும் இந்த படிப்பின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.
வ்ருகைத்தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட 45வது சந்திப்பு, மேலும் உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவு இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? எட்டு வித்தியாச புதிர் போட்டி பரிசு யாருக்கு? மேலும் பல பல பல.......
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து,
தொடர்ந்து எங்கள் வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு,
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து..
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/
Cuties Girls photo with Saree Wow.. I like it very much .Online Tamil News Updates
ReplyDelete