வைஷாலி வாசகர் வட்டம்: சென்றமாதப் புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டிக்கான விடைகள்

FREE JOBS - JUST CLICK HEAR

Friday, 19 August 2016

சென்றமாதப் புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டிக்கான விடைகள்

சென்றமாதப் புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டிக்கான விடைகள்:-

வைஷாலி வாசகர் வட்டத்தின்... சுட்டீஸ் குல்கந்து" http://gulkanthu.blogspot.in/ வலைப்பதிவு மாத இதழின் புகைப்படத்தில் உள்ள படத்தைப் பார்த்து 15-வரிகளுக்கு மிகாமல் பொருத்தமான கதை சொல்லவேண்டும். 

கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது.

தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார். இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர் சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இதைப் போல் அகத்தியரைக் குறித்து புராணங்களில் உள்ள கதைகள் பற்பல.

சென்ற மாதத்திற்கான சரியான படக்கதையை கூறி போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் 21-08-2016 அன்றய நமது 30வது வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

இப்படிக்கு ....வைஷாலி வாசகர் வட்டம்.

No comments:

Post a Comment