வைஷாலி வாசகர் வட்ட 33வது சந்திப்பு...20-11-2016 கார்த்திகை மாதம் -புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்......
இருள் சூழ்ந்திருக்கும் இடத்தில் பிரகாசமான ஒளி ஏற்றப்படுமேயானால் அவ்விடத்தில் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் உண்டாகும்.
20-11-2016 இன்று நமது 33-வது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில்:- ,
கார்த்திகை மாத வாசகர் வட்டத்தின் :-33வது சந்திப்பில் (20-11-2016) முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தொடர்ந்து கார்த்திகை மாதம் -புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும். வாழ்க்கையை ஒளிமயமாக்கும் கார்த்திகை மாத சிறப்புகள் பற்றியும் ஒரு அலசல்....
"என் கேள்விக்கு என்ன பதில்?" நிகழ்ச்சியில் ...
வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்"...
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்".. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் ??????????? என்கிற கேள்விக்கு ...வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ்கள் வழங்கிய "என் கேள்விக்கு என்ன பதில்? " நிகழ்ச்சியில்....மனம்திறந்து பேசினார்கள் ...
"எங்க ஊரில் உள்ள குளங்களையும், ஏரியையும் காணவில்லை?????" அராஜகம், ஆக்கிரமிப்பு, ஏன் என்று கேட்க முடியாத நிலையில்.. ????
முழு விவரங்களுக்கு வருகைத தாருங்கள் வைஷாலி வாசகர் வட்டாத்தின் "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் 20-11-2016 கார்த்திகை மாத இதழில் http://gulkanthu.blogspot.in/
மேலும்:- . படிக்காத தவறாதீர்கள் ...
$ சபிக்கப்பட்ட மனம் மிகுந்த "பூ" எது? சிவனுக்குப் பிடிக்காத, பூசைக்கு உதவாத பூவாக மணம்மிகுந்த "தாழம்பூ" சாபம் பெற்றது என்று கார்த்திகை மாதத்தின் சிறப்புகளை பல்வேறு தெரிந்த புராணம் தெரியாத விவரங்கள் என திருவண்ணாமலை அண்ணாமலையாரின் தல புராண கதைகளை சுட்டீஸ் குல்கந்து தொடரில் திரு முத்து ஐயர் அவர்கள். சுவைபட எடுத்துரைக்கிறார்.
$ இந்தியாவின் முதல் படுக்கைகளுடன் கூடிய திரையரங்கில்.... மெத்தையில் படுத்துக்கொண்டே படம் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? 20-11-2016 அன்றய கார்த்திகை மாத சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவர் இதழின் "குட்டி கல்கண்டு தகவல்கள்:-" பகுதியில்......
$ திருக்குறளை, வாழ்வதற்கு படிச்சவங்கள விட..! "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்கதான் அதிகம் ..!!!!! என
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ்களின் "திருக்குறள் -வம்புக்கு வாங்க" என்கிற புதிய "திருக்குறள்- பேச்சுப்போட்டி" நிகழ்ச்சியில் ...
$ திருமதி. நாமகிரி சந்திரசேகர் அவர்கள் எழுதிய சுட்டீஸ் குழந்தைகளுக்கு, கதையிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? சரியான விடையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதி.
$ குட்டிக் கதைகள் பகுதியில் இந்தமாதம் தலைப்பைச் சார்ந்த கதை :-
1. "மாவலியோ மாவலி' என்று குழந்தைகள் கூறிக் களிப்பதேன்?
2. திருக்கார்த்திகை அன்று மாவலி சுத்துவதை செய்வது எப்படி?
3. கார்த்திகை தீபம் அன்று கோவிலில் சொக்கப்பானை கொளுத்துவது ஏன்? காரணம் என்ன?
4. குயவர் என்பவர் யார்? புதிதாக வாங்கும் மண்பாண்ட அகல் விளக்குகளை நாம் எப்படி பயன்படுத்தவேண்டு?
$ சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் கேள்வி பதில் பகுதியில்:- ஆன்மீக பழக்கங்கள்.
$ நல வாழ்வு பகுதியில்:- 1.உணவே மருந்தாக 26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை-காய்???
$ பொது அறிவுக் கதை. கட்டுரை, தகவல்கள் பகுதியில்
# சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை பற்றி உங்களுக்குத் தெரியுமா?
$சமையல் குறிப்புக்கள் / விருந்துக்கு வாங்க பகுதியில்:-
இஞ்சிப் பால்..! அருமைப் பெருமைகள் ????
$ வைஷாலி வாசகர் வட்டத்தின் சரியான புகைப்படக் கதையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள், ஆறு வித்தியாசங்களை கண்டுபிடித்து பரிசுகளை வெல்லுங்கள் மற்றும் சுட்டீஸ் கதைகளின் மீதிக்கதை அல்லது கதைக்கான விளக்கம் கூறி பரிசுகளை வெல்லுங்கள் போட்டி என்-8 கார்த்திகை மாதம், இதழ்-8
$ "திருமதி கங்காதரன்" அவர்கள் சுட்டீஸ்களுக்கு தொகுத்துத்தரும் கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் "திருக்கார்த்திகைத்" திருநாள் பற்றிய சிறப்புக் கட்டுரை...
மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....
அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். சுட்டீஸ்களின் இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.... http://gulkanthu.blogspot.in/
நன்றி வைஷாலி வாசகர் வட்டம்..