வைஷாலி வாசகர் வட்டம்: வைஷாலி வாசகர் வட்ட 50வது சந்திப்பு, 15-04-2018 (Apr-May)-சித்திரை மாதம்.

FREE JOBS - JUST CLICK HEAR

Sunday, 8 April 2018

வைஷாலி வாசகர் வட்ட 50வது சந்திப்பு, 15-04-2018 (Apr-May)-சித்திரை மாதம்.

வைஷாலி வாசகர் வட்ட 50வது சந்திப்பு, 15-04-2018 (Apr-May)-சித்திரை மாதம்.

வைஷாலி வாசகர் வட்டம் 50வது சந்திப்பு "சித்திரை மாதம்" 15-04-2018 ஆங்கில மாதத்தின் 3வது ஞாயிறு அன்று வழக்கமான நேரம் மற்றும் இடத்தில் விழிப்புணர்வு பயிற்சி மாத "வாழ்க்கைக்கு அவசியமான புள்ளியியலும், கைத்தொழிலும், கைவேலைப்பாடுகளும்-சிறப்பு பயிற்சி". ஞயிறு அன்றய மாலைநேர பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் ....  மாலை 4.00pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

வைஷாலி வாசகர் வட்ட 50வது சந்திப்பு, நமது சுட்டீஸ் உறுப்பினர்கள் ஆர்வமோடு போட்டி போட்டுக்கொண்டு தினமும் அவர்களின் கைவண்ணத்தில் உருவான பொருட்களை அவர்களது முகநூல், வாட்சப், டுவிட்டர், வலைப்பதிவு பக்கங்களில் காட்சிப்படுத்தி அசத்துவதிலிருந்து, அவர்களின் பலருக்கும் பலவிதமான கைவேலைப்பாடு திறமைகள் இருக்கிறது என்பது தெரியவருகிறது. 

@ தொடர்ந்து பொருட்களில் வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல் போன்ற திறமைகளையும். ஐஸ் குச்சிகளில் பொருட்கள், தேங்காய் மூடியில் பொருட்கள், காகிதக் கூழ் பொம்மைகள், மெழுகு பொம்மைகள், களிமண் விளையாட்டு சொப்புக்கள், மண்தொட்டி தாவரங்கள் செய்தல்... 

@ காகிதத்தில் கைவேலைப்பாடுகளுடன் பலவித போட்ருட்கள் செய்தல் திறமைகளையும்.

@ திருமதி சுகந்தி பாலா அவர்கள் அவரின் குருவான திருமதி செல்லம் மாமி அவர்களின் கலைக்குழுவில் விதவிதமான கோலாட்டம், தாண்டியா நடனம், கும்மியாட்டம், கிராமிய நாட்டியம், பாரம்பரிய முறையில் பாடல்களை பாடி சிறப்பான கோலாட்டக்கலையை சிறப்புசெய்துகொண்டிருக்கிறார்கள். அவைகளை நமது சுட்டீஸ் சிறுவர்களுக்கு சொல்லித்தர முன்வந்திருப்பது பாராட்டுதற்குரியது.

@ எனக்கு தையல் வேலைப்பாடுகள், மற்றும் துணிகளில் வாட்டர் பெயிண்டிங், சமிக்கு வேலைப்பாடுகள் கொஞ்சம் தெரியும் அதை உங்களுடன் பகிர்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என்று திருமதி ஆர்த்தி கிருஷ்ணன் சொன்னதோடு சுட்டீஸ்களுக்கு கற்றுக்தரும் இலவச வகுப்புகளையும் ஆரம்பித்து நடத்திவருகிறார்.
@ திருமதி அன்னம்மா சங்கரன் அவர்கள் சுட்டீஸ்களுக்கு பூக்களை வாழைநாரில் நெருக்கமாக அடர்த்தியாக, அழகாக பூ கட்டுவது எப்படி என்று சொல்லித்தருகிறார்கள்.

@ திருமதி நாமகிரி சந்திரசேகரன் அவர்கள், வீட்டை அலங்கரிக்கும் தோரணங்கள், மற்றும் பிளாஸ்டிக் ஒயர் கூடைகள், பிளாஸ்டிக் மணி பொருட்கள் செய்வது குறித்து சொல்லித்தருகிறார்கள்.

@ திருமதி விஜயா ராகவன் அவர்கள் சம்பிரதாய (அரக்கு) காவி மற்றும் அரிசிமாவு இழை கோலங்கள் மற்றும் புள்ளிவைத்த கோலங்கள், வண்ண வண்ண ரங்கோலி கோலங்கள் போடுவதை சுட்டீஸ்களுக்கு சொல்லித்தர தயாராக இருக்கிறார்.

நீங்களும் உங்களுக்கு தெரிந்த கைவேலைபாடுகளான கோலம், தையல், வாட்டர் பெயிண்டிங், எம்போர்டைரி, மண்பொம்மைகள் போன்ற பல அறிய கைவேலைப்பாடுகளை நமது சுட்டீஸ்களுக்கு சொல்லித்தரலாம், இது சுட்டீஸ்களுக்கு மட்டுமல்லாது கைவேலைப்பாடுகளில் விருப்பமுடைய அனைவருக்கும் பயன்படும் வகையில் விழிப்புணர்வு பயிற்சி அமையும் என நினைக்கிறேன் !!

ஞாயிற்றுக்குகிழமை மாலை 4.00pm மணியளவில் வழக்கமான இடத்தில் வருகை தாருங்கள், மேலும் தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ்,  சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.  http://gulkanthu.blogspot.in/

வைஷாலி வாசகர் வட்ட 50வது சந்திப்பு, மேலும்  உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை  "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவு  இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி "vaishalireaderscircle@gmail.com"
@ சென்றமாத எட்டு வித்தியாச புதிர்  போட்டி பரிசு யாருக்கு? 
@"கதை கதையாம் காரணமாம்" பகுதியில் கதையைக் கேட்டு கேள்விக்கு சரியான பதில் சொல்லி பரிசுகளை வெல்லப்போவது யார்? மேலும் பல பல பல....... 

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )

"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் ".
பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி.

# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு, 
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து.. 
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/  

வரும் 15-04-2018 ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறு அன்றய நமது 50வது வாசகர் வட்ட நிகழ்ச்சியில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள இருப்பதால். அனைத்து சுட்டீஸ் உறுப்பினர்களும் தங்களது கைவேலைப்பாடு திறமைகளை கண்காட்சியாக காட்சிப்படுத்த இருப்பதால் அன்றய நிகழ்ச்சியை பயனுள்ளதாக்கி சிறப்பு செய்ய அனைவரும் தங்களால் இயன்ற கைவேலைப்பாடு திறமைகளை அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளும் சிறப்பான விழிப்புணர்வு பயிற்சி மாத சந்திப்பு நிகழ்ச்சியாக அமைய உதவி செய்யவேண்டும் என நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் தலைமை வழிநடத்தும் பெரியவர்கள் மற்றும் நிர்வாக குழுவினர்கள் சார்பில் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...

No comments:

Post a Comment