வைஷாலி வாசகர் வட்டம்: நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி...."இலவச தமிழ் மின்னூல்கள்"

FREE JOBS - JUST CLICK HEAR

Friday, 29 December 2017

நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி...."இலவச தமிழ் மின்னூல்கள்"

நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி...."இலவச தமிழ் மின்னூல்கள்":-http://freetamilebooks.com/

நீங்கள் எழுதிய உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாமே
உங்கள் படைப்புகளை மின்னூலாக "இலவச தமிழ் மின்னூல்கள்"http://freetamilebooks.com" என்ற இணையதள பக்கங்களில் வெளியிடலாம்.

1. திட்டம் பற்றிய விவரங்களை பெற – தமிழில் காணொளி காட்சியைக் கண்டு  – தெரிந்துகொள்ளலாம் 

2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – தெரிந்துகொள்ள கீழ்காணும் இனைய முகவரியை சொடுக்கவும் 
http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101
https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses

உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை கீழ்கண்ட இனைய முகவரியை சொடுக்கி தேர்ந்தெடுக்கலாம்.
http://creativecommons.org/choose/

3.மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற

பின்வரும் தகவல்களுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
நூலின் பெயர்

நூல் அறிமுக உரை

நூல் ஆசிரியர் அறிமுக உரை

உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்
நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  

அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் முகவரியில் அனுப்பவும்.

விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.
——————————————————————————————————–

நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்.
மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? என்பதை எங்களது  –தமிழில் காணொளி – பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook
A4 PDF, 6 inch PDF கோப்புகளை  Microsoft word இலேயே உருவாக்க – http://freetamilebooks.com/create-pdf-files-using-microsoft-word/என்கிற மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம்.
https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum

நன்றி !
வைஷாலி வாசகர் வட்டம்.
4 comments:

 1. தங்கள் பதிவினை "இப்பதிவினைப் படித்த பின் வலைப்பதிவர்கள் எல்லோரும் மின்நூல் வெளியிட முன்வாருங்கள்!" என தளத்தில் பகிர்ந்துள்ளேன்.
  http://www.ypvnpubs.com/2017/12/blog-post_31.html
  பயன்மிக்க இப்பதிவினைப் பகிர்ந்த தங்களுக்கு நன்றி!

  இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாய்
  எந்த உறவுக்கும் அமைய வேண்டுமென
  அந்த இறைவனை வேண்டி நிற்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பின்னுட்டத்திற்கும் தங்களது வலைப்பதிவு பக்கத்தில் பதிவு செய்தமைக்கு எங்களது நன்றி. முக்கியமாக இந்த பதிவு புது தில்லியிலிருக்கும் தாய்மொழி தமிழாக கொண்ட சுட்டீஸ் சிறுவர்களுக்கு தாங்களும் கதை, கவிதை, சிறப்பு கட்டுரை மின்னூல் புத்தகம் வெளியிடவேண்டும் என்கிற ஆர்வத்திற்க்காக அவர்களுக்கு தேவையான பயிற்சிக்குப் பின் அவர்கள் மறந்துவிடாது இருப்பதற்காக இந்த பதிவு எழுதப்பட்டது.
   இது மற்றவர்களுக்கும் மிகப்பயனுள்ளதாக அமைந்தது என்பது ஏராளமானவர்கள் பார்வைகள் இந்தப்பதிவிற்கு கிடைத்திருப்பதால் தெரிகிறது.

   இந்தப்பதிவு அனைவருக்கும் உபயோகமான பதிவாக அமைந்ததற்கு எங்களது நன்றிகள்.

   வரும் மே 2018 மாதம் வைஷாலி வாசகர் வட்ட பொன்விழா, ஐம்பதாம் மாத வாசகர் வட்ட சந்திப்பு நிறைவு விழாவில் வாசகர் வட்டத்தின் சுட்டீஸ் குழுவினர்கள் அனைவரது வலைப்பதிவு விவரங்களை பதிவிட இருக்கிறோம் அதில் புதுதில்லி வட்டத்தில் பல சிறுவர்களின் கதை, கவிதை, சிறப்பு கட்டுரை மின்னூல் புத்தகம் வெளியிட இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

   நன்றிகளுடன்
   வைஷாலி வாசகர் வட்டம் - புது தில்லி

   Delete
 2. freetamilebooks.com மின்னூல் வெளியீட்டாளர்களின் பணி தமிழுக்குப் புதிது. தன்னார்வலர்கள் இப்பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறார்கள். மின்னூலுக்குப் புதிய எழுத்தாளர்களை வரவேற்று ஊக்கமளிக்கும் பாங்கு வியப்பளிக்கிறது. வரும் ஆண்டுகளில் மின்னூல்கள் முதன்மை பெரும். வலைத்தள பதிவர்கள் சுயமாக மின்னூல் வெளியிடும் காலம் வெகுதொலைவில் இல்லை. மின்னூல் வாசிப்புக் கருவிகள் அச்சு நூவ்களுக்கு மாற்றாக வளருமா அல்லது வாடுமா?

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பின்னுட்டத்திற்கும் தங்களது வலைப்பதிவு பக்கத்தில் பதிவு செய்தமைக்கு எங்களது நன்றி.

   இந்தப்பதிவு அனைவருக்கும் உபயோகமான பதிவாக அமைந்ததற்கு எங்களது நன்றிகள்.

   வரும் மே 2018 மாதம் வைஷாலி வாசகர் வட்ட பொன்விழா, ஐம்பதாம் மாத வாசகர் வட்ட சந்திப்பு நிறைவு விழாவில் வாசகர் வட்டத்தின் சுட்டீஸ் குழுவினர்கள் அனைவரது வலைப்பதிவு விவரங்களை பதிவிட இருக்கிறோம் அதில் புதுதில்லி வட்டத்தில் பல சிறுவர்களின் கதை, கவிதை, சிறப்பு கட்டுரை மின்னூல் புத்தகம் வெளியிட இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

   நன்றிகளுடன்
   வைஷாலி வாசகர் வட்டம் - புது தில்லி

   Delete