வைஷாலி வாசகர் வட்டம்: 2023

FREE JOBS - JUST CLICK HEAR

Saturday, 4 March 2023

வைஷாலி வாசகர் வட்ட பங்குனி-2023 மாத சந்திப்பு

வைஷாலி வாசகர் வட்ட பங்குனி-2023 மாத சந்திப்பு, ஒவ்வொரு மாதமும் 3வது  ஞாயிறு 19-03-2023 அன்று அதாவது தமிழ் மாதம் முதல் வாரத்தில் வரும் ஞாயிறு விடுமுறை நாளில் மாலை (3pm to 6pm) நேரத்தை பயனுள்ளதாக்க,  நமது கிழக்கு தில்லி வைஷாலி செக்டர்-4 மைய பூங்காவில் நடைபெறும் மாதாந்திர வாசகர் வட்ட சந்திப்பிற்கு வருகை தாருங்கள்.


நோக்கம் :- நேரில் சந்தித்து பேசி மகிழ்ச்சியை கொண்டாடுவது,கைத்தொலைப்பேசி பயன்பாட்டை குறைத்து அனைவருக்கும் புத்தகங்கள் படிக்கும் மகிழ்ச்சையான பழக்கத்தை உருவாக்குவது.  புத்தகங்களை பரிமாறிக்கொள்வது, உங்களுக்கு பிடித்த, அனுபவம், பயிற்சி, திறமைகள், விருப்பங்கள், போன்ற பல எண்ணங்களை ஒருவருக்கொருவர் பேசி பரிமாறிக்கொள்வது.

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து,
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப்பிராணிகள் வளர்ப்பது )

மேலும் ஒவ்வொரு மாதமும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் வலைப்பதிவு இதழ் வெளியிடுவது,  
உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை, புகைப்பட காட்சிகள், புதிர்  போட்டி, சரித்திரம் முக்கியம் பகுதி,"கதை கதையாம் காரணமாம்" பகுதியில் கதையைக் கேட்டு கேள்விக்கு சரியான பதில் சொல்லி பரிசுகளை பெரும் போட்டி,   போன்றவற்றை  "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவு  இதழுக்காக அனுப்பலாம்.  அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி "vaishalireaderscircle@gmail.com"

சமையல், கைவேலைப்பாடுகள், திறமைகளின் வெளிப்பாடு கள், மனதுக்கு பிடித்த கதை கவிதை கட்டுரைகளின் விமர்சனம், தொடர் கதை, கட்டுரைகளையும் அனுப்பலாம்.  உங்கள் படைப்புகள் அல்லது நீங்கள் வாசித்த புத்தகத்தில் மனதுக்கு பிடித்த கதை கட்டுரை குறிப்புகளுடன் அனுப்பி நமது மாதாந்திர வாசகர் வட்ட வலைப்பதிவில் இடம்பெற செய்யலாம்.

நமது வைஷாலி வாசகர் வட்ட வலைப்பதிவு இதழ் ஒவ்வொரு ஆங்கில மாதமும் 3வது ஞாயிறு அன்று இரவு வெளிவரும். வலைப்பதிவு இதழை  படித்து உங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

# புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு,
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்கள் புத்தக விமர்சகர் பணமுடிப்பு,
# வாசகர் வட்ட நிகழ்ச்சி நினைவு புகைப்படங்கள்  
மேலும் பல .... தொடர்ந்து.. 
வலைப்பதிவு இதழ் வெளியீடு  .... https://vaishalireaderscircle.blogspot.com/