வைஷாலி வாசகர் வட்டம்: August 2018

FREE JOBS - JUST CLICK HEAR

Monday, 27 August 2018

வைஷாலி வாசகர் வட்ட 54வது மாத சந்திப்பு, 19-08-2018 (Aug-Sep)- ஆவணி மாதம். வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல்:-





வைஷாலி வாசகர் வட்டம் 54வது சந்திப்பு "ஆவணி மாதம்" 19-08-2018 ஆங்கில மாதத்தின் 3வது ஞாயிறு அன்று வழக்கமான நேரம் மற்றும் இடத்தில் இந்த மாதம் உங்களுக்கு விருப்பமான தலைப்பில் வாசகர் வட்ட கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்.  மாலை 4.00pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 


வைஷாலி வாசகர் வட்ட 54வது சந்திப்பு, 
ஹலோ சுட்டீஸ் ஒவ்வொரு மாத வாசகர்வட்ட நிகழ்ச்சியிலும் இந்த வருடம் (2018-19)முழுவதும் நாம் பெறப்போகும் பயிற்சிகள்... வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் ஆகியவற்றை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல் குறித்து அறிந்துகொள்ளலாம். 

அந்த வகையில் 19-08-2018, ஆங்கில மாதத்தின் 3வது ஞாயிறு அன்றய 54வது (தமிழ்-ஆவணி மாத) வாசகர் வட்ட சந்திப்பில் நாம் கற்றுக்கொண்ட வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல் குறித்து தெரிந்துகொள்ளும் வரிசையில் வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் குறித்து, அவைகளை இயக்குதல், அவற்றின் பராமரிப்பு, மற்றும் சிறு சிறு பழுது நீக்குதல் குறித்து தெரிந்துகொள்ளும்  பயிற்சி சந்திப்பு மற்றும் வாசகர் வட்ட நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும்.


ஞாயிற்றுக்குகிழமை மாலை 4.00pm மணியளவில் வழக்கமான இடத்தில் வருகை தாருங்கள், மேலும் தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ்,  சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.  http://gulkanthu.blogspot.in/

வைஷாலி வாசகர் வட்ட 54வது சந்திப்பு, மேலும்  உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை  "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவு  இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி "vaishalireaderscircle@gmail.com"
@ சென்றமாத எட்டு வித்தியாச புதிர்  போட்டி பரிசு யாருக்கு? 

@"கதை கதையாம் காரணமாம்" பகுதியில் கதையைக் கேட்டு கேள்விக்கு சரியான பதில் சொல்லி பரிசுகளை வெல்லப்போவது யார்? மேலும் பல பல பல....... 

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )

"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் ".

# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு, 
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து.. 
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/  

வரும் 19-08-2018 ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறு அன்றய நமது 54வது வாசகர் வட்ட நிகழ்ச்சியில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள இருப்பதால். அனைத்து சுட்டீஸ் உறுப்பினர்களும் தங்களது கைவேலைப்பாடு திறமைகளை கண்காட்சியாக காட்சிப்படுத்த இருப்பதால் அன்றய நிகழ்ச்சியை பயனுள்ளதாக்கி சிறப்பு செய்ய அனைவரும் தங்களால் இயன்ற கைவேலைப்பாடு திறமைகளை அனைவருக்கும் பகிர்ந்துகொள்ளும் சிறப்பான சந்திப்பு நிகழ்ச்சியாக அமைய உதவி செய்யவேண்டும் என நமது வைஷாலி வாசகர் வட்டத்தின் தலைமை வழிநடத்தும் பெரியவர்கள் மற்றும் நிர்வாக குழுவினர்கள் சார்பில் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...